நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ராஜினாமா

நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ அவர்கள் அவரது ராஜினாமாவை இன்று அறிவித்தார். 

Last Updated : Dec 5, 2016, 05:15 PM IST
நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ ராஜினாமா title=

வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜான் கீ அவர்கள் அவரது ராஜினாமாவை இன்று அறிவித்தார். 

ஜான் கீ அவர்கள் நியூசிலாந்து பிரதம மந்திரியாக எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார், தனது சொந்த குடும்ப காரணங்களுக்காக ராஜினாமா செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

இந்த முடிவை எனக்கு கடினமான முடிவு என உணர்ச்சி கரமாக அவர் கூறினார். நான் அடுத்த என்ன செய்வேன் என்று எனக்கு தெரியாது என்று ஜான் கீ செய்தியாளர் சந்திப்பில் கூறினார். 

தேசிய கட்சி புதிய தலைவரை தேர்வு செய்யும்வரை துணை பிரதமர் பில் இங்கிலீஸ் பதவியை எடுத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளது. ஜான் கீ ஒரு பிரபலமான தலைவர், அவரின் ராஜினாமா அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Trending News