பனாமா தீர்ப்பு: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் பதவி ஏற்பார்

Last Updated : Jul 29, 2017, 09:31 AM IST
பனாமா தீர்ப்பு: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் பதவி ஏற்பார் title=

‘பனாமா பேப்பர் லீக்ஸ்’  மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இதுதொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.

தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் கூறியது, பிரதமர் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிருப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் விவகாரத்தில் ஈடடுபட்ட நவாஷ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்தது. மேலும் பனாமா ஊழல் விவகாரத்தில் நவாஷ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

பாகிஸ்தான் அரசியல் சாசனம் பிரிவு 62 மற்றும் 63-ன் அடிப்படையில் நவாஸ் ஷெரீப் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து நவாஸ் ஷெரீப் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

நவாஸ் ஷெரீப்பின் ராஜினாமாவை அடுத்து, அவரது இளைய சகோதரர் ஷாபாஸ் ஷெரீப்(வயது65) புதிய பிரதமராக பதவி ஏற்பார் என அறிவிக்கபட்டுள்ளது.  

 

 

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் கட்சியின் தலைவர் மற்றும் முன்னால் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News