பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.
பனாமா நாட்டில் போலி நிறுவனங்கள் தொடங்கி உலகளவில் பிரபலங்கள் பலர் கோடிக்கணக்கில் பணத்தைக் குவித்துள்ளனர். இதுகுறித்து பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம், பனாமா பேப்பர்ஸ் என்ற பெயரில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. அந்த தகவலில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் பெயரும் இடம்பெற்று இருந்தது.
பாகிஸ்தான் அமைச்சரவையில் முதன்முறையாக இந்துவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரக ஷாஹித் காக்கான் அப்சாசி சமீபத்தில் தேர்ந்தெடுக்கபட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையை அவர் அறிவித்தார். அந்த அமைச்சரவையில் தர்சன் லால் என்பவர் பாகிஸ்தான் அரசாங்க அமைச்சரவையில் முதல் இந்துவாக இணைத்துள்ளார்.
65 வயதான தர்ஷன் லால், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பை கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக நேற்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து இதுதொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.
‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்ககியது.
கடந்த ஆண்டு பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம் ‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ என்ற ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.
கடந்த ஆண்டு பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம் ‘பனாமா பேப்பர் லீக்ஸ்’ என்ற ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று சீன பிரதமர் லீ கேகுயாங்-கை சந்தித்து பேசினார்.
பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் சீன அரசு பாகிஸ்தானுக்கு ஆதரவளித்து வருகின்றது. இந்த ஆதரவு தொடரும் என எதிர் பார்க்கிறேன். காஷ்மீர் விவகாரத்தை பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் சீனா தலையிடுவது சிறந்த சாத்தியமான தீர்வை தரும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.
ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் விதமாக விமர்சனம் செய்கிறார் என பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.
இந்த புகாரை இஸ்தியாக் அஹமத் மிர்சா என்ற வழக்கறிஞர் ராவல்பிண்டியில் உள்ள ஒரு போலீஸ் நிலையதில் பாகிஸ்தான் பிரதமர் மீது கொடுத்துள்ளார்.
அந்த புகாரில் கூறப்பட்டது:-
நவாஸ், ராணுவத்திற்கு எதிராக மக்களை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது வாட்ஸ் ஆப்பில் எனக்கு வந்துள்ளது. இதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாக புகாரில் கூறியுள்ளார்.
எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் போரை விரும்பவில்லை என கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து இந்திய ராணுவம் நேற்று முன்தினம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மந்திரிசபையின் அவசர கூட்டத்தை பிரதமர் நவாஸ் ஷெரீப் கூட்டினார்.
ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் எதிர் பார்த்ததை போல காஷ்மீர் பிரச்னையை பற்றி பேசினார்.
இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐ.நா., சபை பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பயங்கரவாதத்தால் பாகிஸ்தானும் நிறைய பாதிக்கப்பட்டுள்ளது. சில வெளிநாடுகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி, ஆயுத உதவி அளிக்கின்றன.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த 21-ம் தேதி நடந்த தேர்தலில், மொத்தமுள்ள 41 இடங்களில் 31 இடங்களை பிரதமர் நவாஸ் ஷெரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (என்) கட்சி கைப்பற்றியது. பாகிஸ்தான் மக்கள் கட்சியும், முஸ்லிம் மாநாட்டுக் கட்சியும் தலா 3 இடங்களைக் கைப்பற்றின.
காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளான்.
பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டு உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடத்தப்பட்ட தேர்தல்களில் மோசடி நடந்ததாக குற்றம் சாட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் சட்டசபைக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அங்கு ஆட்சி செய்து வந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. பாகிஸ்தான்
பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி மொத்தம் உள்ள 41 இடங்களில் 30 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இம்ரான்கான் கட்சிக்கும் 2 இடங்கள்தான் கிடைத்தன.
காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியும், அவரது கூட்டாளிகள் இருவரும் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால், காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பர்கான் வானி கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சல்மான் குர்ஷித், இந்தியாவின் உள்விவகாரங்களில் கருத்து கூறுவதற்கு பாகிஸ்தானுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று பதிலடி கொடுத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.