‘பனாமா பேப்பர் லீக்ஸ்’: பிரதமர் நவாஷ் ஷெரிப் பதவி நீக்கம் - கோர்ட் அதிரடி

Last Updated : Jul 28, 2017, 03:29 PM IST
‘பனாமா பேப்பர் லீக்ஸ்’: பிரதமர் நவாஷ் ஷெரிப் பதவி நீக்கம் - கோர்ட் அதிரடி title=

‘பனாமா பேப்பர் லீக்ஸ்’  மோசடி வழக்கில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்-க்கு எதிராக இன்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்ககியது.

கடந்த ஆண்டு பனாமா நாட்டில் செயல்பட்டு வந்த மோசக் பொன்சிகா நிறுவனம் ‘பனாமா பேப்பர் லீக்ஸ்’  என்ற ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த பனாமா பேப்பர் லீக்ஸில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும், அவரது குடும்பத்தினரும் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ளது.

அதாவது பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது எதிராக குற்றம் நிருப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் ஊழல் விவகாரத்தில் ஈடடுபட்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பை பதவி நீக்கம் செய்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் பனாமா ஊழல் விவகாரத்தில் நவாஷ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

Trending News