பாகிஸ்தான் அமைச்சரவையில் இந்து அமைச்சர்!!

Last Updated : Aug 6, 2017, 03:52 PM IST
பாகிஸ்தான் அமைச்சரவையில் இந்து அமைச்சர்!! title=

பாகிஸ்தான் அமைச்சரவையில் முதன்முறையாக இந்துவிற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமரக ஷாஹித் காக்கான் அப்சாசி சமீபத்தில் தேர்ந்தெடுக்கபட்டார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தனது அமைச்சரவையை அவர் அறிவித்தார். அந்த அமைச்சரவையில் தர்சன் லால் என்பவர் பாகிஸ்தான் அரசாங்க அமைச்சரவையில் முதல் இந்துவாக இணைத்துள்ளார்.

65 வயதான தர்ஷன் லால், பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் ஒருங்கிணைப்பை கவனிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தான் ஆளும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-ன் இந்த 'மறுசீரமைப்பு' ஆனது, 2018 ஆம் ஆண்டின் மத்தியில் வரவிருக்கும்  பொதுத் தேர்தலுக்கு ஆதரவு திரட்டும் நோக்மே என கருதபடுகிறது.

28 மத்திய மற்றும் 19 மாநில மந்திரிகள் உள்பட 47 பேர் கொண்ட அமைச்சரவையின் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் உத்தியோகபூர்வ இல்லத்தில் பதவி ஏற்பு விழா நடைபெறு இருக்கிறது.

Trending News