துருக்கியில் இனி மீட்புப்பணி இல்லை! காரணம் என்ன? இடிபாடுகளுக்குள் யாரும் இல்லையா?

Turkey-Syria Earthquake Latest Updates: கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலில் வாடுகின்றனர்    

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 15, 2023, 06:59 PM IST
  • துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது
  • துருக்கி பேரிடர் மேலாண்மை நிறுவனம் AFAD தகவல்
  • பலி எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியது
துருக்கியில் இனி மீட்புப்பணி இல்லை! காரணம் என்ன? இடிபாடுகளுக்குள் யாரும் இல்லையா? title=

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு மேலாகியும், இடிபாடுகளில் இருந்து இன்னும் அதிகமானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்கிழமை ஒன்பது பேர் மீட்கப்பட்டனர். துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41,000ஐ கடந்துள்ளது. இணையத்தில் பரவி வரும் துருக்கி நிலநடுக்கத்தின் படங்கள் இரு நாடுகளிலும் ஏற்பட்ட பேரழிவின் அளவைக் காட்டுகின்றன. கடந்த வாரம் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்கங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 41000 என்ற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டது; நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலில் வாடுகின்றனர்.

தற்போது கடும் உறைபனியில் மக்கள் வாழ முடியாமல் தவித்து வருகின்றனர். துருக்கி நிலநடுக்கம் ஏற்பட்டதும், உடனே செய்வதறியாமல் திகைத்துப் போனதால், மீட்பு நடவடிக்கைகளில் தொடக்கத்தில் சிக்கல்கள் இருந்ததாக துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் ஒப்புக்கொண்டார். தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அங்காராவில் தொலைக்காட்சியில் பேசிய எர்டோகன், “நம் நாட்டில் மட்டுமல்ல, மனிதகுல வரலாற்றிலும் மிகப்பெரிய இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொள்கிறோம்’ என தெரிவித்தார்.

மேலும் படிக்க | Earthquake: நிலநடுக்கத்தின் கோரத்தண்டவத்தின் எதிரொலி! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

200 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் மீட்பு

செவ்வாயன்று 7.8 ரிக்டர் அளவிலான துருக்கி நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டவர்களின் கதைகளும் அவலமும் மீளாத்துயரைக் கொடுக்கின்றன. இருந்தாலும், 200 மணி நேரத்திற்கும் மேலாக இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களும் மீட்கப்பட்டனர் என்ற செய்திகல் ஆறுதல் அளிக்கின்றன. மேலும் உயிர் பிழைத்தவர்களைக் கண்டுபிடிக்க முடியும் என மீட்புக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இனி மீட்புப் பணியில் ஈடுபடுவதைவிட, உயிர் பிழைத்த மக்களின் உணவு, தங்குமிடம், பள்ளிப்படிப்பு, மருந்துகள் மற்றும் பிற வசதிகளில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறப்படுகிறது.

மனநலப் பிரச்சினைகளால் பாதிப்பு

துருக்கிய மருத்துவமனைகளில், மக்கள் இப்போது உடல் காயங்களுடன் மட்டும் வருவதில்லை. நிலநடுக்கம் மக்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது, மேலும் அவர்கள் "பூகம்பத்தின் போது அவர்கள் அனுபவித்த அனைத்து அதிர்ச்சியையும் தொடர்ந்து அவர்கள் பிந்தைய மனஉளைச்சல் கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று இந்திய இராணுவ மேஜர் பீனா திவாரி கூறினார்.

மேலும் படிக்க | துருக்கி சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை  அதிகரிப்பு! உதவிக்கு விரைந்த இந்தியா

துருக்கி மற்றும் சிரியாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் உளவியல் தாக்கம் மிகப்பெரியது. துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் உள்ள குடும்பங்கள், தாங்களும் தங்கள் குழந்தைகளும் நிலநடுக்கத்தின் உளவியல் ரீதியான விளைவுகளைக் கையாள்வதாகக் கூறினர்.

சிரியாவின் அலெப்போவில் உள்ள தனது 9 வயது சிறுவன், இரவில் தூக்கத்தில் இருந்து அதிர்ந்து எழுவதாக இந்திய இராணுவ மேஜர் பீனா திவாரி கூறுகிறார்.

சிரியாவில் நிலநடுக்க பாதிப்பு

சிரியா நாட்டு அதிபர் பஷார் அல்-அசாத், துருக்கியில் இருந்து மேலும் இரண்டு எல்லைக் கடவுகள் வழியாக ஐ.நா உதவி சிரியாவிற்குள் வருவதற்குக் ஒப்புக்கொண்டார். செவ்வாயன்று புதிதாக திறக்கப்பட்ட பாப் அல்-சலாம் எல்லைக்கடப்பு வழியாக கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவிற்குள் ஐ.நா உதவி உள்ளே நுழைந்தது.

இந்த முடிவு டமாஸ்கஸுக்கு ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது, கிளர்ச்சியாளர்களின் எல்லைக்கு எல்லை தாண்டிய உதவி விநியோகங்களை நீண்டகாலமாக எதிர்த்து வந்த நிலையில், பூகம்பத்தின் பாதிப்பால், ஒரு சிறு ஆறுதலும் கிடைத்துள்ளது..

சிரியாவில் நிலநடுக்கம் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் மக்களை பாதித்துள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியது, சிரியாவின் வடமேற்கில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி முடித்துக் கொள்ளப்படுகிறது. 

மேலும் படிக்க | Turkey Earthquake: அதிகரிக்கும் துருக்கி நிலநடுக்க சேதாரங்கள்! இதுவரை 15,383 பேர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News