7th Pay Commission: 2023-ல் அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்!

7வது ஊதியக் குழு விதிகளின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 42 சதவீதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Dec 28, 2022, 07:35 AM IST
  • 2023ம் ஆண்டில்முதல் சுற்று அகவிலைப்படி (டிஏ) உயர்வு .
  • அகவிலைப்படி மொத்தம் 34 சதவீதமாக உயர்ந்தது.
  • 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் பெரியளவில் பலன் கிடைக்கும்.
7th Pay Commission: 2023-ல் அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பார்ட்! title=

2023ம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய தொகை கிடைக்கபோகிறது, கடந்த 2022ம் ஆண்டை காட்டிலும் வரப்போகும் 2023ம் ஆண்டில்முதல் சுற்று அகவிலைப்படி (டிஏ) உயர்வு மேம்படுத்தப்பட்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அகவிலைப்படி 3 சதவீதமாக உயர்த்தப்பட்டு, அதுவரை 31 சதவீதமாக இருந்த அகவிலைப்படி மொத்தம் 34 சதவீதமாக உயர்ந்தது.  அடுத்ததாக 2022ல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக கூறப்பட்டது.  தற்போது 2023 ஆம் ஆண்டின் முதல் டிஏ உயர்வு 2022 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வந்த அறிவிப்பில் இருந்து 4 சதவீதத்தை பிரதிபலிக்கும் என்று சில தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் படிக்க | Free Ration Scheme: நீங்களும் இலவச ரேஷன் பெறனுமா?அப்போ இத மட்டும் பண்ணுங்க

7வது ஊதியக் குழு விதிகளின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி விகிதம் 42 சதவீதம் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த அகவிலைப்படி உயர்வின் மூலமாக 48 லட்சம் ஊழியர்களுக்கும் பலன் கிடைக்கும் அதே நேரத்தில் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலை நிவாரணம் (டிஆர்) வடிவில் பெரியளவில் பலன் கிடைக்கும்.

ஜனவரி மாத அகவிலைப்படி உயர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்படும், இதன் உயர்வு 3 முதல் 5 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, அகவிலைப்படி 4 சதவீதம் உயரக்கூடும் என கூறப்படுகிறது.  மற்றொரு முக்கியமான விஷயமா அகவிலைப்படி  கணக்கீட்டிற்கான ஃபார்முலா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் புதிய ஃபார்முலாவுடன் மாற்றப்பட உள்ளது.  இந்த புதிய ஃபார்முலா மூலம் அகவிலைப்படி உயர்வுக்கான அடிப்படை ஆண்டு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Jio மற்றும் Airtel பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி, ரீசார்ஜ் கட்டண விலை உயரலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News