7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. அவர்கள் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டிருக்கும் ஒரு முக்கியமான செய்தி அவர்களுக்கு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 18 மாத அரியர் தொகை குறித்து அவர்களுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.
கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட 18 மாத கால டிஏ நிலுவைத் தொகை குறித்து நீண்ட காலமாக விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால் இதற்கான தெளிவான பதில் இன்னும் கிடைக்கவில்லை. மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் இதற்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அரசு சாதகமான செய்திகளை அளித்துள்ளது.
அகவிலைப்படி அரியர் தொகை
COVID-19 தொற்றுநோய்களின் போது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத டிஏ மற்றும் டிஆர் நிலுவைத் தொகையை விடுவிக்க வாய்ப்பு இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இது தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக பாஜக தலைமையிலான அரசாங்கம் மத்தியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்பட்டமுதல் பட்ஜெட்டில் அரசாங்கம் அகவிலைப்படி அரியர் தொகை பற்றிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.
18 Month DA Arrears: தவணைகளில் அளிக்கப்படுமா?
18 மாத டிஏ அரியர் தொகையை அளிக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில், ஆண்டு இறுதியில் ஊழியர்களுக்கு டிஏ அரியர் தொகையை அரசாங்க, வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை தகுதியான ஊழியர்களின் கணக்கில் மூன்று தவணைகளாக அரசு டெபாசிட் செய்யும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
18 Month Arrear Amount: அகவிலைப்படி ஏன் முடக்கப்பட்டது
கொரோனா பெருந்தொற்றால் உலகமே பாதிக்கப்பட்டது நம் அனைவருக்கும் நினைவில் உள்ளது. அப்போது உருவான அசாதாரண சூழ்நிலையால், அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்தன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. அதை சமாளிக்க, மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை முடக்கியது. ஜனவரி 2020, ஜூலை 2020 மற்றும் ஜனவரி 2021 ஆகிய மூன்று தவணைகளை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. அந்த தொகை, அதிக தேவையில் இருந்த நலிந்த பிரிவு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கான பயன்படுத்தப்பட்டது.
DA Arrears: டிஏ அரியர் முதல் தவணை எப்போது வரும்?
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட முதல் தவணை டிஏ நவம்பர் 20 ஆம் தேதி வெளியிடப்படும் என்று துறை சார்ந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. தீபாவளிக்கு முன்பிலிருந்தே இது போன்ற செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இது தீவிரமடைந்துள்ளது. ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக இது கிடைக்கலாம் என நம்பப்படுகின்றது. இதைக் கேட்ட ஊழியர்களால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
Central Government Employees: டிஏ 53 சதவீதமாக அதிகரித்துள்ளது
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணத்தை (Dearness Relief) 3 சதவீதம் உயர்த்தியுள்ளது. இதன் பிறகு ஊழியர்களின் டிஏ மற்றும் டிஆர் 53% ஆக உயர்ந்துள்ளன. இதுமட்டுமின்றி ஜூலை மாதம் முதல் டிஏ அரியர் வழங்கவும் கோரப்பட்டுள்ளது. தீபாவளிக்கு முன்பே, சில ஊழியர்களின் கணக்கில் மூன்று மாத டிஏ நிலுவைத் தொகை வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவின் கீழ், இந்த அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை செய்யப்படுகிறது.
நவம்பர் மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ள அமைச்சவரை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகின்றது. அகவிலைப்படி அரியர் தொகையை அரசாங்கம் அளித்தால், நாட்டின் கோடிக்கணக்கான ஊழியர்கள் இதன் மூலம் பயனடைவார்கள். இந்த நிலுவைத் தொகை ஊழியர்களை நிதி ரீதியாக பலப்படுத்தும். இந்தத் தொகை நேரடியாக ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ