Gold Investment: தங்கம் விலை கடந்த சில நாள்களாக கடுமையாக உயர்ந்துள்ளது எனலாம். அட்சய திருதியை முன் சற்று விலை குறைந்தாலும், அட்சய திருதி அன்றே மூன்று முறை விலை உயர்ந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. தற்போது தங்கம் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
நேற்று தங்கம் விலை ரூ. 200 குறைந்த நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் 1 சவரன் ரூ.54,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமிற்கு 80 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது, தற்போது ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6 ஆயிரத்து 850 ரூபாயில் விற்பனை ஆகி வருகிறது.
முதலீட்டில் 2 வகை தவறுகள்...
இந்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு என வாய்ப்பு என பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது யூ-ட்யூப் பக்கத்தில் அவர் பேசியதாவது,"முதலீடு செய்வதில் இரண்டு வகை தவறுகள் உள்ளன. எக்காரணம் கொண்டும் எந்த காலத்திலும் வாங்கக் கூடாத பங்குகளை தரகர்களின் பேச்சுக்கேட்டு வாங்குனீர்கள் என்றால் அது முதல் வகை தவறு. மற்றொரு வகை தவறு என்னவென்றால், சரியான நேரத்தில் நல்ல பங்குகள் நல்ல விலையில் கிடைக்கும் போது அதில் முதலீடு செய்யாமல் விட்டுவிடுவது என்பதாகும்.
இதில் இரண்டாவது வகை தவறில் உங்களில் பெரிய நஷ்டம் இல்லை என்றாலும் முதல் வகை தவறில் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தையில் திடீர் சரிவு ஏற்படும்போது உங்களின் ஃபோர்ட்போலியோவில் சில பங்குகள் மட்டும் மிச்சமாக இருக்கும். அதை பார்த்தாலே அவர்கள் முதலீட்டில் முதல் வகை தவறுகளை செய்துள்ளனர் என அர்த்தம். சில நிறுவனங்களுக்கு என்றைக்குமே அவர்களின் பிஸ்னஸ் மாடல்கள் பிடிபடாத ஒன்றாகவே. எனவே, அதில் முதலீடு செய்தால் நிச்சயம் நஷ்டம்தான்.
நீண்ட கால பலன்களுக்கு...
இரண்டாவது வகை தவறு என்பது நல்ல பங்குகளை நாமினல் விலையில் வாங்காமல் விடுவது எனலாம். இருப்பினும் இதை செய்தாலும் உடனடியாக சுதாரித்துக்கொள்ளலாம். முதல் வகை தவறை செய்தால் அடுத்து சந்தை பக்கமே தலைவைத்து படுக்க முடியாதபடி ஆகிவிடும். இந்த இரண்டாவது வகை தவறை சரிசெய்ய நினைத்தீர்கள் என்றால், நீண்ட கால பலன்களை தரக்கூடிய பங்குகள் எதுவோ அதனை ஆராய்ந்து அவற்றை வாங்கலாம்.
தங்கத்தில் முதலீடு...
குறிப்பாக, கர்நாடகா வங்கி பார்த்தால் நான் 35 ரூபாயில் கவனித்து, 250 ரூபாய் வரை சென்றது. தற்போது 220 ரூபாயில் உள்ளது, இதை அப்போது வாங்காமல்விட்டால் இரண்டாவது வகை தவறு எனலாம். அதேபோல், தங்கத்தை 3600 ரூபாய் இருக்கும்போது வரை கூறினேன், 5200 ரூபாயில் இருக்கும் போது மீண்டும் ஒருமுறை அழுத்திச் சொன்னேன், அப்போது பலரும் யோசித்தார். இப்போது 6200 ரூபாயில் இருந்து 7000 ரூபாய் வரை டிரேட் ஆகி வருகிறது. இப்போது மிஸ் பண்ணா 8500 ரூபாயில்தான் பிடிக்க முடியும். இருப்பினும், அந்த காலகட்டத்தை சரியாக கணிக்க முடியாது" என்றார். எனவே, இந்த காலகட்டத்தில் தங்கம் வாங்குவது நல்ல முதலீடாக பார்க்கப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: Zee News எந்த விதமான முதலீட்டையும் இங்கு அறிவுறுத்துவதில்லை, எந்த உத்தரவாதத்தையும் இங்கு அளிக்கவில்லை. எந்த விதமான முதலீட்டையும் செய்யும் முன், கண்டிப்பாக முதலீடு சார்ந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும்)
மேலும் படிக்க | வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்... வருமான வரி விதிகள் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ