Wheat Price Update: கோதுமை விலை குறைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கோதுமை விலை உயர்வைக் கட்டுப்படுத்த, இறக்குமதி வரியை குறைப்பது உள்ளிட்ட அனைத்து வழிகளையும் அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த தகவலை உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா நேற்று (ஆக. 5) தெரிவித்தார். அரிசி விஷயத்தில், பூட்டானில் இருந்து இதுவரை 80 ஆயிரம் டன் அரிசியை வழங்குமாறு இந்தியாவுக்கு அரசு மட்டத்தில் கோரிக்கை வந்துள்ளது என்றார்.
கோதுமை ஏற்றுமதிக்கு தடை
கடந்தாண்டு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் சில்லறை சந்தையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது. கோதுமை மற்றும் மாவின் விலையை கட்டுப்படுத்த, அரசு கோதுமை இருப்புக்களை வெளிச்சந்தையில் மாவு ஆலைகள் மற்றும் பிற வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 46% டிஏ... ஊதிய உயர்வு எவ்வளவு? முழு கணக்கீடு இதோ
மாற்று வழிகள்
இதுகுறித்து சோப்ரா செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த ஏலத்தில் இருந்து கோதுமை விலை அதிகரித்துள்ளது. அரசு அனைத்து வாய்ப்புகளையும் பரிசீலித்து, உரிய முடிவை எடுக்கும். திறந்த சந்தை விற்பனைத் திட்டத்தின் (OMSS) கீழ், 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மத்தியக் குழுவில் இருந்து 1.5 மில்லியன் டன் கோதுமையை மாவு ஆலைகள், தனியார் வர்த்தகர்கள், மொத்தமாக வாங்குவோர் மற்றும் கோதுமைப் பொருட்களின் உற்பத்தியாளர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
வெப்பம் காரணமாக உற்பத்தி குறைந்தது
நாட்டின் கோதுமை உற்பத்தி முந்தைய ஆண்டில் 109.59 மில்லியன் டன்னில் இருந்து 2021-22 பயிர் ஆண்டில் (ஜூலை-ஜூன்) 107.74 மில்லியன் டன்னாகக் குறைந்துள்ளது. இதனால், கடந்த ஆண்டு 43 மில்லியன் டன்னாக இருந்த அரசு கொள்முதல், இந்த ஆண்டு 19 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது.
கோதுமை உற்பத்தி அதிகரிக்கும்
2022-23ஆம் ஆண்டில், அதிக பரப்பளவு சாகுபடி மற்றும் சிறந்த விளைச்சல் காரணமாக, கோதுமை உற்பத்தி 11 கோடியே 27.4 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அரிசி குறித்து செயலாளர் கூறுகையில், பூட்டானில் இருந்து இதுவரை 80 ஆயிரம் டன் அரிசியை வழங்குமாறு இந்தியாவுக்கு அரசு மட்டத்தில் கோரிக்கை வந்துள்ளது. உள்நாட்டில் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் உடைந்த அரிசி மற்றும் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் பருவமழை காரணமாக தக்காளி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அத்தியாவசிய பொருள்களின் விலையை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் பெரும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு அரசு மானியம்! வாழ வைக்கும் வாழைக்கு 40% மானியம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ