Mutual Fund vs PPF: மனிதர்களாகிய நம் அனைவருக்கும் பணத்திற்கான தேவை உள்ளது. எதிர்காலத்திற்கான திட்டமிடல் என்பது அனைவரும் செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும். எனினும், அனைவரின் திட்டங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. தேவைகள், பொருளாதார நிலை, குடும்பச் சூழல், வேலை, வியாபாரம் ஆகியவற்றைப் பொறுத்து மக்கள் முதலீட்டு திட்டங்களைத் தேர்ந்தெடுதது எதிர்காலத்திற்கான திட்டமிடலை செய்கிறார்கள்.
முதலீடுகளைப் (Investments) பொறுத்தவரையில் சிலர் ஆபத்துகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். சிலர் பாதுகாப்பான முதலீடுகளை தேர்வு செய்கிறார்கள். உதாரணமாக சொல்ல வேண்டுமானால் சிறிது ரிஸ்க் எடுக்க விரும்புபவர்கள் மியூசுவல் ஃபண்டுகளில் விருப்பம் காட்டுகிறார்கள். ஏனெனில் இவற்றில் ஆபத்து இருந்தாலும், அதிக வருமானம் கிடைக்கின்றது. பாதுகாப்பான திட்டங்களில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பிபிஎஃப் போன்ற திட்டங்களில் தங்கள் பணத்தை சேமிக்கிறார்கள்.
இந்த இரு திட்டங்களில் உள்ள வித்தியாசம் என்ன? இதில் அதிக பலன்களை அளிக்கும் திட்டம் எது? எது உங்களை விரைவில் கோடீஸ்வரராக்கும்? இதை பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund):
இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எதிர்காலத்திற்கு நாம் பணத்தை சேமிப்பது மட்டுமல்லாம், வரியையும் சேமிக்கலாம். பிபிஎஃப் முதலீட்டாளர்களுக்கு பிபிஎஃப் இருப்புத் தொகைக்கு வட்டி கிடைக்கின்றது. ஆனால், இந்த வட்டித் தொகைக்கு வரி (Tax) விதிக்கப்படுவதில்லை. PPF திட்டத்தின் சில முக்கிய நன்மைகள் இதோ:
- வரி விலக்கு: பிபிஎஃப் -இல் முதலீடு செய்வதன் மூலம், வருமான் வரி சட்டத்தின் (Income Tax Act) பிரிவு 80C -இன் கீழ், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ. 1.50 லட்சம் ரூபாய் வரை வரிவிலக்கு பெறலாம்.
- குறைந்தபட்ச முதலீடு (ரூ.500): வெறும் ரூ.500 கொண்டு இந்த திட்டத்தில் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
- அரசாங்க பாதுகாப்பு: இந்த திட்டட்திற்கு அரசாங்க பாதுகாப்பின் உத்தரவாதம் கிடைக்கின்றது.
மியூசுவல் ஃபண்டுகள் (Mutual Funds):
மியூசுவல் ஃபண்டுகளில் நாம் முதலீடு செய்யும் தொகை தொழில்முறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகின்றது. முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் தொகையை, இவர்கள் பல இடங்களில் முதலீடு செய்கிறார்கள். இதில் குறிக்காக பங்குச்சந்தையில் (Share Marke) அதிகம் முதலீடு செய்யப்படுகின்றது. மியூசுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் இதோ:
- முதலீட்டாளரின் தொகை தொழில்முறை வல்லுனர்களால் நிர்வகிக்கப்படுகின்றது.
- இதில் அதிக லாபம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக அதிகம்.
- சிறிய தொகை கொண்டும் இதை தொடங்கலாம்
- எஸ்ஐபி (SIP) அல்லது மொத்த தொகைக்கான வசதிகள் கிடைக்கும்
Mutual Fund vs PPF: இரண்டில் எது சிறந்தது
ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு முதலீட்டாளர் மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்ய தயாராக இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
மேலும் படிக்க | சேமிப்பு கணக்கு மூலம் அதிக வட்டி பெறுவது எப்படி? ‘இந்த’ வழிமுறைகளை பின்பற்றலாம்!
கோடீஸ்வரராக பிபிஎஃப் -இல் எத்தனை காலம் எடுக்கும்?
- அவர் இந்தத் தொகையை PPF -இல் முதலீடு செய்தால், அவருக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
- தற்போது PPF -இல் 7.1% வட்டி கிடைக்கிறது.
- வட்டி விகிதத்திற்கு ஏற்ப ppf-இன் வருமானம் அதிகரிக்கலாம், குறையலாம்.
- தற்போதைய வட்டி விகிதத்தின் (Imterest Rate) படி பார்த்தால் மாதா மாதம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்யும் இந்த முதலீட்டாளர் கோடீஸ்வரராக 27 ஆண்டுகள் ஆகும்.
கோடீஸ்வரராக மியூசுவல் ஃபண்டுகளில் எத்தனை காலம் எடுக்கும்?
- இதில் முதலீட்டாளர்களுக்கு எளிதாக சுமார் 12% வருடாந்திர வருமானம் கிடைக்கின்றது.
- ஏனென்றால் இதில் கூட்டுத் தொகையின் நன்மையும் நமக்கு கிடைக்கின்றது.
- ஒரு முதலீட்டாளர் மாதா மாதம் ரூ.10,000 முதலீடு செய்து அவருக்கு 12 சதவீத வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் 20 வருடங்களில் அவர் கோடீஸ்வரர் ஆகலாம்.
- 15 சதவிகித வருமானம் கிடைத்தால் 20 ஆண்டுகளில் அந்த முதலீட்டாளர்களுக்கு 1.75 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ