Income Tax: ‘இந்த’ தவறுகளை செஞ்சுடாதீங்க... அபராதம் செலுத்த வேண்டி வரும்!

வருமான வரி தாக்கலின் போது நீங்கள் செய்யும் சில தவறுகளுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படலாம். , உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது கவனமாக இருக்கவும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 4, 2024, 02:59 PM IST
Income Tax: ‘இந்த’ தவறுகளை செஞ்சுடாதீங்க... அபராதம் செலுத்த வேண்டி வரும்! title=

வருமான வரி தாக்கல்: வருமான வரி தாக்கலில் போது, தவறான தகவல்களை கொடுத்தாலோ அல்லது தகவல்களை மறைத்தாலோ, கடுமையான நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். எனவே உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் போது கவனமாக இருக்கவும். எனவே கீழ்கண்ட விஷயங்களில் கவனம் தேவை. கீழே குறிப்பிட்டுள்ள தவறுகள் வரி ஏய்ப்பாக கருதப்படும்

- வருமானத்தை மறைத்தல்
- வரிக்கான கழிவுகளை மிகைப்படுத்துதல் அல்லது போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விலக்கு கோருதல்
- தவறான வருமான வரி அறிக்கையை சமர்ப்பித்தல்
- வரி கணக்கு தாக்கல் செய்யாமல் இருத்தல்
- பண பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியது
- வரி விதிக்கக்கூடிய வருவாயைக் குறைக்க அல்லது செலவுக் கழிவுகளை அதிகரிக்க கணக்குப் புத்தகங்களில் தவறான பதிவுகளைச் செய்தல்

வரி ஏய்ப்பு என்பது வருமான வரிச் சட்டம் 1961ன் கீழ் தண்டனைக்குரிய கடுமையான குற்றமாகும். அபராதங்கள் தானாகவே அல்லது வரி அதிகாரிகளின் விருப்பப்படி விதிக்கப்படலாம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.

வரி ஏய்ப்பிற்கான சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில தண்டனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

1. சுய மதிப்பீட்டு வரி செலுத்துவதில் செய்யும் தவறுகள்:
- அபராதம்: மதிப்பீட்டு அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்ட நிலுவையில் உள்ள வரி அளவு வரை.

2. வருமான வரி தாக்கலில் செய்யும் தவறுகள்:
- அபராதம்: நிலுவைத் தேதிக்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்தால் ரூ. 5,000. மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால் அபராதம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும்.

3. வருமானத்தை குறைத்து கூறுதல் மற்றும் தவறாக குறிப்பிடுதல்
- அபராதம்: குறைத்த வருமானத்திற்கு வரி 50 சதவீதம்; தவறாகப் தகவல் அளித்தல் 200 சதவீதம்.

மேலும் படிக்க | உங்களுக்கும் வருமான வரித்துறை நோட்டீஸ் வந்ததா? இதுதான் காரணம்

4. கணக்குகளின் பதிவுகளை பராமரிப்பதில் குறைபாடு:
- அபராதம்: பிரிவு 44AA இன் படி கணக்கு வழக்கு பதிவேடுகளை பராமரிக்கவில்லை என்றால் ரூ 25,000. சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு, அத்தகைய பரிவர்த்தனைகள் அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகளின் மதிப்பில் 2 சதவீதம்.

5. கணக்குகளை தணிக்கை செய்வதில் குறைப்பாடு
- அபராதம்: ரூ. 1,50,000 அல்லது தணிக்கை செய்யப்படாத கணக்குகளின் மொத்த விற்பனை/விற்றுமுதல்/மொத்த ரசீதில் 0.5 சதவீதம். வெளிநாட்டு பரிவர்த்தனைகள் தொடர்பான தணிக்கை அறிக்கைகளை வழங்கத் தவறினால், ரூ. 1,00,000 அபராதம் விதிக்கப்படும்.

6. வெளியிடப்படாத வருமானத்தை தீர்மானித்தல்:

- அபராதம்: வரித் தொகையை விடக் குறைவாக இருக்காது. ஆனால் வெளியிடப்படாத வருமானத்தைப் பொறுத்தவரை விதிக்கப்படும் வரியை விட மூன்று மடங்குக்கு மிகாமல் இருக்கும்.

7. வரி செலுத்துவதில் தவறினால் அபராதம்:
- அபராதம்: வரி செலுத்துவோர் தவறினால் மதிப்பீட்டாளராகக் கருதப்பட்டால், மதிப்பீட்டு அதிகாரியால் விதிக்கப்படும். அபராதம் நிலுவையில் உள்ள வரிக்கு மேல் இருக்காது.

மேலும் படிக்க | UPI பரிவர்த்தனைகளுக்கு ரூ.7500 வரை கேஷ்பேக்... DCB வங்கி வழங்கும் அசத்தல் ஆஃபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News