புதுடெல்லி: கொரோனா (COVID-19) தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, கடனைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட சலுகைக் காலம் நீட்டிக்கப்பட வேண்டும், கூடுதல் வட்டி, வட்டிக்கு வட்டி விதிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கோரிக்கை வைத்து தாக்கல் செய்த மனுக்கள் மீது மார்ச் 23 அன்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், எம்.ஆர் ஷா மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்திய ரிசர்வ் வங்கி வழங்கிய ஆறு மாத கடன் தடை சலுகை காலத்தை நீட்டிக்க மறுத்துவிட்டது. மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடனுக்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்ய உத்தரவிட முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கோவிட் -19 (COVID-19) தொற்றுநோயைக் (கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி அறிவித்த ஆறு மாத கால அவகாச காலத்திற்கான வட்டியில் தளர்வு வழங்கினால், ரூ .6 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும். இதனால் வங்கிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். எனவே வட்டி தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று மத்திய அரசு (Central Government) உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பதில் மனுவில் தெரிவித்திருந்தது. இன்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.
உச்ச நீதிமன்றம் வழக்கின் முக்கிய சிறப்பம்சங்கள்:
கடனைத் திருப்பிச் செலுத்த அளிக்கப்பட்ட சலுகைக் காலத்தின் போது பெற்ற கடனுக்கான வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், எந்தவொரு குறிப்பிட்ட நிதி தொகுப்புகள் அல்லது நிவாரணங்களை அறிவிக்க மத்திய அரசுக்கோ அல்லது ரிசர்வ் வங்கிக்கோ உத்தரவிட முடியாது.
வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வங்கிகள் வட்டி செலுத்த வேண்டியிருப்பதால் முழுமையான வட்டி தள்ளுபடி செய்ய முடியாது என்று நீதிபதி ஷா குறிப்பிட்டார்.
மத்திய அரசின் நிதிக் கொள்கையில் நீதிமன்றம் தலையிடாது. வங்கிகள் இந்தச் சுமையைச் சுமக்க வேண்டுமென்றால், அது அவர்களின் நிகர மதிப்பில் கணிசமான மற்றும் ஒரு முக்கிய பகுதியை பாதிக்கும் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
ALSO READ: Loan Moratorium: கடன் தவணை சலுகையில் வட்டிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்கு..!!!
எவ்வாறாயினும், கடன் தடைக்காலத்தின் (Loan Moratorium) போது வட்டி மீதான வட்டி அல்லது அபராத வட்டி எதுவும் இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இப்போது வரை வசூலிக்கப்பபட்டு வரும் வட்டி மீதான வட்டியை அடுத்த ஈ.எம்.ஐ. (EMI) தவணையில் சரிசெய்யப்பட வேண்டும் அல்லது அவர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டும். இயல்புநிலை ஏற்பட்டால் மட்டுமே கூட்டு வட்டி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நிதி, பொருளாதார மற்றும் வர்த்தகரீதியான விஷயங்களில் நீதிபதிகள் வல்லுநர்கள் அல்ல. மத்திய அரசு எடுக்கும் பொருளாதாரக் கொள்கை விஷயங்களில் நீதிமன்றங்கள் (Supreme Court) தலையிட முடியாது. கொரோனா தொற்றுநோய் அனைத்து துறைகளையும் பாதித்தது என்று நீதிபதி ஷா கூறினார்.
பொருளாதார முடிவுகளை எடுப்பது அரசாங்கம்தான் எடுக்க வெண்டும்: உச்ச நீதிமன்றம்
சில துறைகளில் அதிருப்தி இருப்பதால், நீதிமன்றம் கொள்கை விஷயங்களில் தலையிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எந்தக் கொள்கையை தொடர வேண்டும் என்பதையும் எதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதையும் மத்திய அரசு தீர்மானிக்கட்டும். நீதித்துறை மறுஆய்வு, அரசாங்க கொள்கைகளில் சிறப்பாக வரையறுக்கப்படுகிறது. கொள்கையின் சட்ட அம்சங்களை மட்டுமே நீதிமன்றம் கவனிக்கிறது, பொருளாதார முடிவுகளை எடுப்பது அரசாங்கத்தின் உரிமை என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
அரசு எதுவும் செய்யவில்லை என்று சொல்வது சரியல்ல: உச்ச நீதிமன்றம்
இந்த தொற்றுநோய் அனைத்து துறைகளையும் பாதித்துள்ளது என்றும், தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் (Supreme Court) கூறியது. தொற்றுநோய்களின் போது அரசாங்கத்திற்கு எந்த ஆதரவும் இல்லை என்றாலும், இந்த காலகட்டத்தில் அரசாங்கத்தின் ஜிஎஸ்டி பற்றாக்குறையும் அதிகரித்தது. தொற்றுநோய்களின் போது அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் எதுவும் செய்யவில்லை என்று சொல்வது சரியானதல்ல. நிவாரணங்களைப் பற்றி யோசிக்கப்பட்டது, முழு வட்டி தள்ளுபடி சாத்தியமில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வங்கிகள் வட்டி செலுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.
ALSO READ: Loan Moratorium News: Good News- இந்த தேதிக்குள் கணக்கில் தொகை செலுத்தப்படும்!!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR