NPS Vatsalya: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான திட்டம்... கோடிகளில் வருமானம் கேரண்டி, கணக்கீடு இதோ

NPS Vatsalya Scheme: என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் இந்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டமிடலை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே செய்யலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 21, 2024, 02:17 PM IST
  • என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் கீழ், முதல் நாளில் 9705 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இவற்றில் 2197 கணக்குகள் இ-என்பிஎஸ் போர்டல் மூலம் தொடங்கப்பட்டுள்ளன.
NPS Vatsalya: குழந்தைகளின் எதிர்காலத்திற்கான அற்புதமான திட்டம்... கோடிகளில் வருமானம் கேரண்டி, கணக்கீடு இதோ title=

NPS Vatsalya Scheme: மத்திய அரசு சமீபத்தில் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தை தொடக்கி வைத்தது. குழந்தைகளின் ஓய்வூதிய திட்டமிடலுக்கான இந்த திட்டம் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதல் நாளில் 9705 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 18 செப்டம்பர் 2024 அன்று தொடங்கினார். என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தால் கிடைக்கும் பயன்கள் என்ன? இதில் யாரெல்லாம் சேரலாம்? இதற்கான விதிகள் என்ன? இவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.

என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம்

குழந்தைகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை தொடங்குவது, என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தின் நோக்கமாகும். குழந்தைகளுக்குப் பதிலாக, அவர்களது பெற்றோர்கள் இந்த திட்டத்தில் ஓய்வூதிய நிதிக்கான முதலீட்டை செய்கிறார்கள். இதன் மூலம், பெற்றோர் வழக்கமான காலத்திற்கு முன்னதாகவே ஓய்வூதியத் திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இதன் மூலம் கூட்டுத்தொகையின் நிகரற்ற பலன் குழந்தைகளுக்குக் கிடைக்கும். என்பிஎஸ் வாத்சல்யா திட்டம் PFRDA ஆல் இயக்கப்படுகிறது. முன்னதாக 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த திட்டத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த மாதம் 18 ஆம் தேதி இந்த திட்டம் தொடக்கி வைக்கப்பட்டது.

என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது

பிஎஃப்ஆர்டிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், முதல் நாளில் 9705 சிறார்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவற்றில் 2197 கணக்குகள் இ-என்பிஎஸ் போர்டல் மூலம் தொடங்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் குழந்தைகள் PRAN கார்டுகளுக்குப் பதிவு செய்யப்படுவார்கள். PRAN என்பது இது நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (Permanent Retirement Account Number) ஆகும்.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு நவராத்திரிக்கு முன் தீபாவளி: அதிரடி டிஏ ஹைக்.... எப்போது, எவ்வளவு?

ஓய்வூதிய திட்டமிடல்

என்.பி.எஸ் வாத்சல்யா திட்டம் இந்திய அரசின் ஒரு முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் கீழ் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டமிடலை வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது குழந்தைப் பருவத்திலேயே செய்யலாம். இளையர்களாகும் முன்னரே அவர்களது ஓய்வூதியத் திட்டமிடல் செய்யப்பட்டால், காம்பவுண்டிங் வட்டி மூலம், அவர்கள் ஒப்பிடமுடியாத பலன்களைப் பெற முடியும். இதை ஒரு உதாரணத்தின் மூலம் புரிந்துகொள்வோம்.

NPS Vatsalya Calculator: NPS vs NPS Vatsalya

18 வயதனவுடன் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்தால்

முதலீடு செய்யப்படும் ஆண்டுகள்: 18 வயது முதல் 60 வயது வரை
முதலீடு: ரூ. 5,000
கால அளவு: 42 ஆண்டுகள்
மொத்த முதலீடு: ரூ.25.2 லட்சம்
எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதம்: 13%
நிதி மதிப்பு: ரூ. 8.3 கோடி

5 வயது முதல் என்பிஎஸ் வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்தால்

முதலீடு செய்யப்படும் ஆண்டுகள்: 5 வயது முதல் 60 வயது வரை
முதலீடு: ரூ. 5,000
கால அளவு: 55 ஆண்டுகள்
மொத்த முதலீடு: ரூ.33 லட்சம்
எதிர்பார்க்கப்படும் வருவாய் விகிதம்: 13%
நிதி மதிப்பு: ரூ.40.9 கோடி

மேலும் படிக்க | அவசர கடனுக்கு அரேஞ் செய்வது எப்படி? இந்த 4 வழிகளில் உடனடியாக கடன் பெறலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News