இந்தியா தனது 75வது குடியரசு தினத்தை ஜனவரி 26, 2025 அன்று கொண்டாட தயாராக உள்ள நிலையில், டெல்லிக்குச் செல்லும் அல்லது வரும் பயணிகளுக்கு புதன்கிழமை ஏர் இந்தியா ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. விமான நிலையத்திற்குச் செல்வதற்கு, பயணிகள் தங்கள் பயணத்திற்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கி, தங்கள் விமானங்கள் புறப்படும் நேரத்த்தை கணக்கில் கொண்டு, வழக்கமாக வருவதை விட சிறிது முன் கூட்டியே வர வேண்டும் என்று விமான நிறுவனம் கேட்டுக் கொண்டது.
கடுமையான மூடுபனி
புதன்கிழமை அதிகாலையில் டெல்லியின் சில பகுதிகளை அடர்த்தியான மூடுபனி மூடியதால், நகரம் முழுவதும் தெரிவுநிலை கணிசமாகக் குறைந்தது. புதன்கிழமை தேசிய தலைநகரின் சில பகுதிகளை அடர்ந்த மூடுபனி சூழ்ந்தது. குளிர் காலத்தின் முதல் கடுமையான மூடுபனி மூன்று மணி நேரம் நீடித்தது. இது குறைந்த தெரிவுநிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டன அல்லது வந்தன.
தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது
ஜனவரி 15 ஆம் தேதி காலை டெல்லி மிகவும் அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. சஃப்தர்ஜங் மற்றும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் காலை 8:30 மணி முதல் காலை 11:30 மணி வரை தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது (Zero Visibility) என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. குளிர் பருவத்தில் முதல் முறையாக அடர்ந்த மூடுபனி ஏற்பட்டது. உச்ச மூடுபனி நேரத்தில் IGI விமான நிலைய ஓடுபாதைகளில் RVR 75-300 மீட்டர் வரை இருந்தது என்று வானிலை அறிக்கை மேலும் கூறியது.
மேலும் படிக்க | இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம்....4234 கி.மீ. தூரம்... 3 நாட்கள்... 9 மாநிலங்கள்
GRAP-4 நிலைக்கான கட்டுப்பாடு அமல்
சாதகமற்ற வானிலை நிலைமைகள் காரணமாக காற்றின் தரமும் பெரிதும், பாதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை டெல்லி - NCR பகுதிகளில் காற்றின் தரத்திற்கான மையக் குழு, காற்றின் தர நிலையின் GRAP 4 நிலைக்கான சில கட்டுப்பாடுகளை விதித்தது என்று அதிகாரப்பூர்வ உத்தரவு தெரிவிக்கிறது.
தில்லி மற்றும் என் சி ஆர் பகுதிகளில், குறைந்த வேகத்தில் வீசிய காற்று, குறைந்த வெப்பநிலை மற்றும் மூடுபனி நிலைமைகள் ஆகியவை மாசு அதிகரிக்க காரணமானது, காற்றின் தரக் குறியீடு செவ்வாய்க்கிழமை 275 என்ற நிலையில் இருந்து புதன்கிழமை மாலை 6 மணிக்கு 396 என்ற அளவாக உயர்ந்தது.
மேலும் படிக்க | Reliance Jio... ரூ. 448 ரீசார்ஜில்... தினம் 2GB டேட்டா உடன் ... 12 OTT சேனல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ