Aadhaar Card Loan Tamil | மத்திய அரசால் நடத்தப்படும் பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் கீழ், ஆதார் அட்டையை மட்டும் வைத்துக்கொண்டு ரூ.50,000 வரை கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதற்கு எந்த உத்தரவாதமோ அல்லது பாதுகாப்போ தேவையில்லை. இந்தக் கடன் சிறு வணிகர்கள் மற்றும் தெரு வியாபாரிகளுக்கு தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க உதவும். நடைமுறை சிக்கல்கள் எதும் இருக்காது.
பொதுவாக வங்கியில் கடன் பெற, நாம் பல்வேறு ஆவணங்களைக் காட்ட வேண்டும். இதற்கு பல விதிமுறைகள் இருக்கின்றன. ஆனால் உங்களுக்குத் தெரியுமா? ஆதார் அட்டையைப் பயன்படுத்திக் கடன் வாங்கலாம். இது பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், ஆதார் அட்டை மூலம் ரூ.50,000 வரை கடன் பெறுவது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஒரு தெரு வியாபாரியாக இருந்தாலோ அல்லது உங்களுக்குச் சொந்தமாக ஒரு சிறு தொழில் நடத்தி வந்தாலோ, இப்போது நிதிப் பிரச்சினைகளைச் சந்தித்து வந்தால் மத்திய அரசின் இந்த சூப்பரான திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள். 2020 ஆம் ஆண்டில், அதாவது கோவிட் தொற்றுநோய் காலத்தில், மத்திய அரசு தெருவோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியது. கொரோனா காலத்தில் சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் நோக்கம், சிறு வணிகர்களுக்கு நிதி உதவி வழங்குவதும், அவர்களைத் தன்னிறைவு பெறச் செய்வதும் ஆகும். உத்தரவாதமும் இல்லாமல் வணிகர்களுக்கு கடன்கள் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம்?
பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனா திட்டத்தின் கீழ், வர்த்தகர்கள் எந்த உத்தரவாதமும் இல்லாமல் ஆதார் அட்டை மூலம் கடன் பெறலாம். இந்தத் திட்டத்தின் நோக்கம் சிறு வணிகர்கள் தங்கள் தொழிலை மீண்டும் தொடங்க நிதி உதவி வழங்குவதாகும். இந்தத் திட்டத்தின் செயல்முறை மிகவும் எளிதானது, இதன் மூலம் சிறு வணிகர்கள் தங்கள் வணிகத்தை மீண்டும் வலுப்படுத்த முடியும். இந்தத் திட்டத்தின் கீழ், முதல் தவணையாக வர்த்தகர்களுக்கு ரூ.10,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்தக் கடன் எந்த உத்தரவாதமும் இல்லாமல் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். வர்த்தகர்கள் முதல் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அடுத்த முறை ரூ.20,000 வரை கடன் பெறலாம். வர்த்தகர்கள் தொடர்ந்து கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தினால், அவர்களின் கடன் ரூ.50,000 ஆக அதிகரிக்கப்படும். கடனை 12 மாத காலத்திற்குள் தவணைகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
பிரதான் மந்திரி ஸ்வாநிதி யோஜனாவின் கீழ் கடனுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை மிகவும் எளிமையானது. இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, முதலில், உங்களிடம் ஆதார் அட்டை இருக்க வேண்டும், ஏனெனில் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் செயல்முறை ஆதார் அட்டை அவசியம். உங்கள் ஆதார் அட்டை உங்கள் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தால், e-KYC மற்றும் ஆதார் சரிபார்ப்புக்கு இந்த இணைப்பு அவசியம்.
தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள்
இந்தத் திட்டத்திற்கு நீங்கள் எந்த அரசு வங்கியிலும் சென்று விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இது தவிர, உங்கள் அருகிலுள்ள பொது சேவை மையத்துக்கு (CSC) சென்று கடனுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் போது உங்கள் தனிப்பட்ட விவரங்கள், வணிக விவரங்கள் மற்றும் ஆதார் அட்டை விவரங்களை வழங்க வேண்டும். இது தவிர, நீங்கள் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் வணிக ஆவணங்களையும் (தேவைப்பட்டால்) வழங்க வேண்டும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ