ரேஷன் கார்டில் மனைவி பெயர் விடுபட்டிருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியுமா?

Kalaingar Magalir Urimai Thogai | ரேஷன் கார்டில் மனைவி பெயர் விடுபட்டிருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற முடியுமா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) பெற ரேஷன் கார்டில் மனைவி பெயர் இல்லாதபோது என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

1 /8

தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை (Kalaingar Magalir Urimai Thogai) வழங்குகிறது. இந்த திட்டத்தில் இப்போது 1 கோடியே 15 லட்சம் பெண்கள் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுகிறார்கள். 

2 /8

அடுத்த மூன்று மாதங்களுக்குள் புதிய பயனாளிகள் கலைஞர் உரிமைத் திட்டத்தில் சேர்க்கப்பட உள்ளனர். இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி அடுத்த 90 நாட்களுக்குள் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. 

3 /8

இதில் ஏற்கனவே தகுதி இருந்தும் சேர்க்கபடாமல் இருக்கும் பெண்கள் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களும் மீண்டும் இந்த திட்டத்தில் சேர வாய்ப்புள்ளது.

4 /8

எதற்காக தங்கள் பெயர் நிராகரிக்கப்பட்டது என்பது குறித்து மேல்முறையீடு செய்தால் அவர்களின் விண்ணப்பம் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு, உண்மை இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். இதுதவிர இன்னும் சில சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருக்கிறது. அதில் ஒன்று, குடும்ப தலைவியாக பெண்கள் இல்லாமல் இருந்தால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?

5 /8

குடும்ப தலைவராக ரேஷன் கார்டில் கணவர் பெயர் இருந்தால் கலைஞர் உரிமைத் தொகை கிடைக்குமா?, ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டில் இருந்தால் எத்தனை பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும், ஒருவேளை ரேஷன் கார்டில் மனைவி பெயர் விடுபட்டிருந்தால் எப்படி இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்வது என்பது உள்ளிட்ட கேள்விகள் இருக்கின்றன. 

6 /8

குடும்ப தலைவியாக பெண்கள் இல்லாமல் ஆண்கள் இருந்தாலும், ரேஷன் கார்டில் பெயர் இருந்தால் பெண்களே குடும்ப தலைவியாக கருதப்பட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். ஒரே வீட்டில், அதாவது ஒரே ரேஷன் கார்டில் இரு பெண்கள் இருந்தால் இருவரில் ஒருவருக்கு மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும். 

7 /8

ஒருவேளை ரேஷன் கார்டில் மனைவி பெயர் விடுப்பட்டிருந்தால் வேறு யாரேனும் 21 வயது நிரம்பிய தகுதி வாய்ந்த பெண்கள் இருந்தால் அவர்கள் கலைஞர் உரிமைத் தொகை வாங்கிக் கொள்ளலாம். இல்லையென்றால் மனைவி பெயரை ரேஷன் கார்டில் சேர்க்கக்கோரி விண்ணப்பிக்க வேண்டும்.

8 /8

அதன்பிறகு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த விண்ணப்பத்தினை அதிகாரிகள் பரிசீலித்து கலைஞர் உரிமைத் தொகை திட்ட பயனாளியாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.