Kidney health | சிறுநீரகம் நமது உடலின் மிக முக்கியமான உறுப்பு ஆகும். இது இரத்தத்தை சுத்தம் செய்து, சிறுநீர் வழியாக உடலில் இருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது. ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இருப்பது மிகவும் முக்கியம். ஒருவேளை சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை ஏற்பட்டால் உடலில் பல நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். ஏனென்றால் உடல் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய வேலையை செய்வதே சிறுநீரகங்கள் தான். அதனால் அவை ஆரோக்கியமாக இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதில் கவனம் செலுத்த தொடங்கினீர்கள் என்றாலே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திவிடலாம்.
என்ன செய்தால் கிட்னி ஆரோக்கியமாக இருக்கும் என்றால், மிகவும் சிம்பிளாக டிப்ஸை மட்டும் கடைபிடித்தால் போதும். அதாவது, காலையில் எழுந்தவுடன் சில எளிய முறைகளைப் பின்பற்றுங்கள். சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், மிகவும் சுறுசுறுப்பாகவும் மாற்றலாம். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் வி.கே. பாண்டே, சிறுநீரகத்தில் நச்சுக்கள் தேங்காமல் நீங்குவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளார். அவரின் இந்த டிப்ஸ் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்கும்.
ஆயுர்வேத மருத்துவர் வி.கே. பாண்டேவின் கூற்றுப்படி, சிறுநீரகங்கள் ஆரோக்கியமான முறையில் செயல்பட, சில பணிகளை காலையில் செய்ய வேண்டும். இதைச் செய்வது பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதோடு பல நோய்களையும் தடுக்கிறது. சிறுநீரகங்களை நீண்ட நேரம் சுறுசுறுப்பாகவும், சிறப்பாகவும் வைத்திருக்க தண்ணீர் மிகவும் முக்கியம். போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களை சுறுசுறுப்பாகவும் சிறப்பாகவும் செயல்பட வைக்கிறது.
பித்தப்பைக் கற்கள் தடுப்பு
நிறைய தண்ணீர் குடிப்பது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது. ஆரோக்கியமான சிறுநீரகங்களுக்கு உடற்பயிற்சியும் மிகவும் முக்கியம். தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும், மேலும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். சிறுநீரகம் நச்சு நீக்கம் செய்யப்படாவிட்டால், சிறுநீரக கற்கள் போன்ற நோய்கள் ஏற்படலாம். மேலும் அது சிறுநீரக செயலிழப்பையும் ஏற்படுத்தும்.
சிறுநீரகங்களை நச்சு நீக்கம் செய்ய, தினமும் காலையில் குறைந்தது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும், அதில் எலுமிச்சை சேர்த்துக் குடித்தால், அது அதிக நன்மை பயக்கும். இது நச்சுக்களை நீக்கி சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மிகவும் முக்கியம். இருப்பினும், நொறுக்குத் தீனிகள் மற்றும் ஜீரணிக்க நேரம் எடுக்கும் உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. இதனுடன், உணவில் உப்பையும் பெருமளவில் குறைக்க வேண்டும். அதிக உப்பு சாப்பிடுவது சிறுநீரக கற்களை ஏற்படுத்தும். ஆக்சலேட் கொண்ட உணவுகளையும் சிறிய அளவில் சாப்பிட வேண்டும். சிறுநீரகம் தொடர்பான எந்தவொரு பிரச்சினைக்கும், உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
நார்ச்சத்து மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். வெறுமனே அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுகளை எடுத்துக் கொள்வதை விட, அதிக காய்கறி பழங்கள் இருக்குமாறு உணவு முறையை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நீண்ட ஆயுளுடன் இருக்க உதவும்.
மேலும் படிக்க | எச்சரிக்கை... தைராய்டு முதல் சிறுநீரக கல் வரை... அளவிற்கு மிஞ்சிய கீரை நல்லதல்ல
மேலும் படிக்க | நரம்பு மண்டலம் முதல் எலும்புகள் வரை.... சூப்பர் சிறுதானியம் கம்பு கட்டாயம் தேவை
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ