உருளைக்கிழங்கு விலை உயர்வைக் குறைக்க பூடானிலிருந்து இறக்குமதி: அரசு அனுமதி!!

உருளைக்கிழங்கின் சில்லறை விலையை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 31, 2020, 11:05 AM IST
  • உருளைக்கிழங்கின் அதிகரிக்கும் விலையைக் கட்டுப்படுத்த பூட்டானிலிருந்து உருளை இறக்குமதி செய்யப்படும்.
  • 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது
  • 2019-20ஆம் ஆண்டில் நாட்டில் உருளைக்கிழங்கு மகசூல் 513 லட்சம் டன்னாக இருந்தது.
உருளைக்கிழங்கு விலை உயர்வைக் குறைக்க பூடானிலிருந்து இறக்குமதி: அரசு அனுமதி!!  title=

உருளைக்கிழங்கின் அதிகரிக்கும் விலையை நிறுத்த அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுத்துள்ளது. பூட்டானில் (Bhutan) இருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்வதற்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது.

இந்த முடிவின் மூலம், அடுத்த சில நாட்களில் பூட்டானிலிருந்து 30,000 டன் உருளைக்கிழங்கு இந்தியாவுக்கு வரும். இதன் காரணமாக, பண்டிகை காலங்களில் உருளைக்கிழங்கின் (Potato) விலை தொடர்ந்து அதிகரிப்பது நிறுத்தப்படும். 2021 ஜனவரி 31 வரை இந்த இறக்குமதிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

உருளைக்கிழங்கின் சில்லறை விலையை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் (Piyush Goel) இன்று தெரிவித்தார். 30 ஆயிரம் டன் இறக்குமதி இதன் ஒரு பகுதியாகும். உருளைக்கிழங்கின் சில்லறை விலை பற்றி பேசுகையில், இது நாடு முழுவதும் மிக வேகமாக அதிகரித்துள்ளது.

ALSO READ: Good News: வெங்காயத்தின் விலை தீபாவளிக்கு முன் மேலும் குறையும்..!!!

2021 ஜனவரி மாதத்திற்குள் 10 லட்சம் டன் உருளைக்கிழங்கை இறக்குமதி செய்வதற்கான சுங்க வரி 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் கூறினார். கோயல் ஒரு வீடியோ மாநாட்டின் மூலம் செய்தியாளர்களிடம் பேசுகையில், உருளைக்கிழங்கின் விலை அதிகரித்து வருகிறது என்றும் அகில இந்திய சராசரி சில்லறை விலை கடந்த மூன்று நாட்களாக ஒரு கிலோ ரூ .42 ஆக நிலையாக உள்ளது என்றும் கூறினார்.

உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று கோயல் கூறினார். பண்டிகைகளின் போது உருளைக்கிழங்கு, வெங்காயம் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் கிடைப்பதை உறுதிசெய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்ட இரண்டாவது அட்வான்ஸ் மகசூல் தரவுகளின்படி, 2019-20ஆம் ஆண்டில் நாட்டில் உருளைக்கிழங்கு மகசூல் 513 லட்சம் டன்னாக இருந்தது. 2018-19ஆம் ஆண்டில் நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தி 501.90 லட்சம் டன்னாக பதிவாகியுள்ளது. கடந்த பயிர் ஆண்டில் உருளைக்கிழங்கின் அதிக மகசூல் இருந்தபோதிலும், இந்த ஆண்டு உருளைக்கிழங்கு விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

ALSO READ: விலை உயர்வு எதிரொலி: மானிய விலையில் பருப்பு வகைகளை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News