அவகாசம் உள்ளது என அலட்சியம் கூடாது, வருமான வரி தாக்கல் தாமதம் பல இழப்புகளை ஏற்படுத்தும்

அரசு தான் அவகாசம் கொடுத்துள்ளதே என அலட்சியம் காட்டாதீர்கள். வருமான வரி தாக்கல் தாமதப்படுத்துவதால் பல விதமான பாதிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2020, 03:59 PM IST
  • அரசு தான் அவகாசம் கொடுத்துள்ளதே என அலட்சியம் காட்டாதீர்கள். வருமான வரி தாக்கல் தாமதப்படுத்துவதால் பல விதமான பாதிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
  • வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்யும் போது வருமான வரி விலக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்துவதைத் தவிர, வரி செலுத்துவோர் அந்த ஆண்டிற்கான சில விலக்குகளையும் இழக்க நேரிடலாம்
அவகாசம் உள்ளது என அலட்சியம் கூடாது, வருமான வரி தாக்கல் தாமதம் பல இழப்புகளை ஏற்படுத்தும் title=

கொரோனா காரணமாக, வருமான வரி  (ஐ.டி.ஆர்) தாக்கல் செய்ய அரசு நிறைய அவகாசம் வழங்கியிருந்தது. இதன் காரணமாக அனைத்து வரி செலுத்துவோரும் சரியான நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். எந்தவொரு வரி செலுத்துவோருக்கும் உங்கள் வருமான வரியை உரிய தேதியில் அல்லது அதற்கு முன் தாக்கல் செய்வது மிக முக்கியமான பணியாகும்.

அரசு தான் அவகாசம் கொடுத்துள்ளதே என அலட்சியம் காட்டாதீர்கள். வருமான வரி தாக்கல் தாமதப்படுத்துவதால் பல விதமான பாதிப்புகள் மற்றும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.

ஒருபுறம், வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்தால், வருமான வரி விலக்கு மிக குறைவாகவே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) தாமதமாக தாக்கல் செய்வது பெரும் இழப்பை ஏற்படுத்தும். அதனால் கீழ்கண்ட விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்.

இதனால் வருமான வரி விலக்கு கிடைக்காது என்பதோடு, வரி செலுத்துவோர் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். 

இழப்பு:
வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்யும் போது, ​​வரி செலுத்துவோர் வீட்டிற்கு ஏற்பட்ட சேதத்தைத் தவிர வேறு எந்த வகையான இழப்பையும் அடுத்த வருடத்திற்கு கேரி பார்வேர்ட் செய்ய இயலாது.

பிரிவு 234 ஏ இன் கீழ் வட்டி:

வருமான வரி தாக்கல் தாமதமானால், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234 ஏ இன் கீழ், வரி செலுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 1 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டும்.தாமதமாக தாக்கல் செய்ததற்கான கட்டணம்:

நிதியாண்டு 2018-19 ஆண்டிற்கான வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்தால், பிரிவு 234F இன் கீழ் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், மதிப்பீட்டு ஆண்டின், டிசம்பர் மாதம் 31 க்கு முன்னர், தாமதமாக தாக்கல் செய்ய ரூ .5,000 வசூலிக்கப்படுகிறது. டிசம்பர் 31 க்குப் பிறகு வருமான வரி தாக்கல் செய்யப்பட்டால்,  ரூ .10,000 அபராதம் விதிக்க்பட்டும். இருப்பினும், மொத்த வருமானம் ரூ .5 லட்சத்திற்கு மிகாமல் இருந்தால், தாமதமாக தாக்கல் செய்வதற்கான கட்டணம் ரூ.1,000 க்கு மேல் இருக்காது.

மேலும் படிக்க | PAN கார்டு தொடர்பான தவறுக்கு 10,000 ரூபாய் அபராதம்.... ஜாக்கிரதை..!!!

தாமதமாக தாக்கல் செய்தால் அபராதம் செலுத்துவதைத் தவிர, வரி செலுத்துவோர் அந்த ஆண்டிற்கான சில விலக்குகளையும்  இழக்க நேரிடலாம். வருமான வரியை தாமதமாக தாக்கல் செய்யும்போது எதற்கெல்லாம் வருமான வரி விலக்கு இருக்காது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு -10 ஏ மற்றும் பிரிவு -10 பி ஆகியவற்றின் கீழ் விலக்கு கிடைக்காது.

பிரிவு 80 IA, 80IAB, 80IC, 80ID மற்றும் 80IE இன் கீழ் கிடைக்கும் விலக்குகளையும் இழக்க நேரிடும்.

மேலும் படிக்க | மாதம் ₹70,000 வரை சம்பாதிக்க Amazon வழங்கும் அற்புத வாய்ப்பு..!!!

Trending News