வாட்ஸ் (WhatsApp), இண்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் பேஸ்புக் (Facebook) சேவைகள் உலக அளவில் நேற்று பல இடங்களில் முடங்கியது பயனர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்ஸ்டாகிராமின் 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள், சேவை முடங்கியதாக புகார் அளித்தனர்.மேலும் 25,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் வாட்ஸ்அப் சேவையில் சிக்கல்கள் உள்ளதாக புகாரளித்தனர். பேஸ்புக் மெசஞ்சர் பயனர்களும் சிக்கல்களை எதிர்கொண்டனர்.
வாட்ஸ்அப் (WhatsApp) சேவைகள் சுமார் 45 நிமிடங்கள் முடங்கியதாக பயனர்கள் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
"இன்று, சில பேஸ்புக் சேவைகளை அணுகுவதில், தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டது. இந்த சிக்கலை நாங்கள் தீர்த்து வைத்தோம், மேலும் மக்கள் சிக்கலை சந்தித்ததால் ஏற்பட்ட பாதிப்பிற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்று பேஸ்புக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் (Instagram) தனது ட்வீட்டில், "சிலருக்கு தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்குகளை இயக்குவதில் சிக்கல்களை எதிர்கொண்டனர், ஆனால் இப்போது பிரச்சினை சரி செய்யப்பட்டது. சிக்கலுக்கு வருந்துகிறோம்" எனக் கூறியுள்ளது.
ALSO READ | WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு
உலகெங்கிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் அதன் புகைப்பட பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராமில் சிக்கல்களை சந்தித்தாக புகாரளித்ததை அடுத்து, சேவைகள் பல விதமான தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் இன்கார்பரேஷன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. " பல அணிகள் சேவையை மீட்டெடுக்க பணியாற்றி வருகின்றன, எங்களால் முடிந்தவரை விரைவில் சேவையை மீட்டெடுப்போம்" என்று பேஸ்புக்கின் கேமிங் யூனிட் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
சேவை முடக்கம் குறித்து, பயனர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர், இந்தியா உட்பட பல நாடுகளில் #whatsappoutage என்னும் ஹாஷ்டேக் ட்ரெண்டிங் ஆனது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் மற்றும் புகைப்பட பகிர்வு தளமான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் உலக அளவில் செயல்படாமல் முடங்கிய போது இந்தியா உட்பட உலகளவில் மில்லியன் கணக்கான பயனர்கள் அது குறித்து புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ALSO READ | WhatsApp-ன் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் வேறு செயலியைப் பயன்படுத்துங்கள்: HC
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR