ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள்: இனி எதன் விலைகள் உயரும்? எதன் விலைகள் குறையும்?

55th GST Council Meeting Recommendations: 55ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம் முன்வைக்கப்பட்ட பின்னர், எதன் விலைகள் உயரும், எதனை விலைகள் குறையும் என்பதை இதை காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Dec 22, 2024, 12:26 PM IST
  • இந்த கூட்டம் நேற்று நடைபெற்றது.
  • மத்திய அமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது.
  • இதில் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள்: இனி எதன் விலைகள் உயரும்? எதன் விலைகள் குறையும்? title=

55th GST Council Meeting Recommendations: 55ஆவது சரக்கு மற்றும் சேவை வரி கவுன்சில் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று (டிச. 22) நடைபெற்றது. அந்த வகையில், ஜிஎஸ்டி கவுன்சில் இந்த கூட்டத்தில் வணிகம் மற்றும் தனிநபர்களுக்கான வரி செயல்முறைகளை ஒழுங்குபடுத்துதல், வரி சலுகைகள் வழங்குதல் ஆகியவை குறித்து சில முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

என்னென்ன சேவைகளின் விலைகள் உயரும்?

குறிப்பிட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை தவிர அனைத்து பழைய வாகனங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்களுக்கும் இந்த விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

முன்பே, பேக் செய்யப்பட்ட மற்றும் லேபிள் செய்யப்பட்ட பாப்கார்னுக்கு 12 சதவீதம் வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கேரமலைஸ் செய்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. உப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் கலந்த பாப்கார்ன் முன்பே பேக்கேஜ் மற்றும் லேபிள் செய்யப்படாவிட்டால் 5 சதவீத ஜிஎஸ்டி உடன் வரும்.

கட்டடம் கட்ட பயன்படும் ACC எனப்படும் கான்கிரீட் பிளாக்குகளில் 50% மேல் ஃபிளை ஆஷ் (Fly Ash) உள்ளடக்கத்துடன் இருந்தால், அதற்கு 12% ஜிஎஸ்டி வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார்ப்பரேட் நிறுவனங்களின் ஸ்பான்சர்ஷிப் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | EPFO Rules: PF கணக்கில் பிறந்த தேதி தவறாக பதிவாகியுள்ளதா... சரிசெய்வது எப்படி...

என்னென்ன சேவைகளின் விலைகள் குறையும்?

செறிவூட்டப்பட்ட அரிசி இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) மூலம் வழங்கப்படுகிறது. இந்த அரிசியானது ஊட்டச்சத்து அளிக்கும் வகையில் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு அரசால் வழங்கப்படுகிறது. இதன் மீதான ஜிஎஸ்டி சதவீதமாகக் குறைத்து பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது. இலவச விநியோகத்திற்கான உணவுப் பொருள்கள் குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு அரசின் நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்படும் உணவு இடுபொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு நீட்டிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு மிளகு மற்றும் உலர் திராட்சையில் ஜிஎஸ்டியில் வரிவிலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மரபணு சிகிச்சை பெறுவோருக்கு ஜிஎஸ்டியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனால் இனி மரபணு சார்ந்த சிகிச்சைகள் மிகவும் மலிவுடையலாம். இந்த பொருள்களை விவசாயிகள் நேரடியாக விற்கும் போது ஜிஎஸ்டி தேவையில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் ஆய்வுக்காக உபகரணங்கள் மற்றும் நுகர்வு மாதிரிகள் இறக்குமதியில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் இருந்து வரி வலிக்கு அளிக்க பரிந்துரைக்கப்பபட்டுள்ளது. நீண்ட தூரம் தரையில் இருந்து வான்நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளின் ஒருங்கிணைப்பும் அமைப்புகள், துணை அமைப்புகள் மற்றும் இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்டும் கருவிகளுக்கும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | வருகிறது புதிய விதி! இனி வங்கிகள் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News