Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!

கடின உழைப்பு காரணமாக, மூளை சோர்வடையும் போது தலையில் பாரம், மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 16, 2022, 04:52 PM IST
  • கடின உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது.
  • மன சோர்வுக்கான அல்லது மன பாரத்திற்கான காரணங்கள்.
  • மன சோர்வுக்கு நிவாரணம் தரும் ஆயுர்வேத மருந்துகள்.
Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்! title=

கடின உழைப்பு காரணமாக, நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. உங்கள் மூளை சோர்வடையும் போது தலையில் பாரம், மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் அனைத்தும், நீங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கிறது. மேலும் மூளை சோர்வு காரணமாக, சில சமயங்களில் மனம் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தொடங்கும். மூளைச் சோர்வு பல காரணங்கள் உண்டு. மன பாரத்திற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்று பார்ப்போம்.

மன சோர்வுக்கான அல்லது மன பாரத்திற்கான காரணங்கள்

மன சோர்வு உங்கள் அன்றாட வேலையை பாதிக்கிறது. மன சோர்வுக்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். நீடித்த நோய், மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல், அதிக மன அழுத்தம் உள்ள நிலை போன்றவை அனைத்தும் மன சோர்வுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.

மன சோர்வுக்கு நிவாரணம் தரும் ஆயுர்வேத மருந்துகள் 

மனச் சோர்வை போக்குவதில் மூன்று ஆயுர்வேத மருந்துகள் சிறந்த பலனைத் தரும். இது நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். இதில் அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி ஆகியவை அடங்கும்.

அஸ்வகந்தா ஒரு தெய்வீக மருந்து. இது உங்கள் மன அழுத்தத்தை போக்கி மனதை அமைதிபடுத்துகிறது. இந்த மருந்தை நோயின் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. அன்றாடம் சோர்வு இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க | Health Tips: உடலுக்கு ஆக்ஸிஜனை அள்ளி வழங்கும் 'சில' பழங்கள்!

பிராமி என்ற மூலிகை உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். மேலும் இது மன சோர்வை போக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும், மறதி பிரச்சனை நீங்கவும், பிராமியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

சங்கபுஷ்பம் என்ற மூலிகை மருந்து மனதை கூர்மையாக்க மிகவும் உதவுகிறது. இதனை உட்கொள்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். மனச் சோர்வை நீக்கி மூளையை சுறுசுறுப்பாக்குகிறது. 

மேலும் படிக்க | Heart Health: இதய நோய் அண்டாமல் இருக்க ‘இவற்றை’ பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்!

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News