உடல் எடையை குறைக்க நீங்கள் நினைத்தால் இதற்கு, ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும். ஏனெனில், இதன் உதவியுடன் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த முடியும். ஆனால் பெரும்பாலானோர் உடல் எடையை குறைக்க உடற்பயிற்சியுடன் உணவிலும் கவனம் செலுத்த மறந்து விடுகிறார்கள். அதனால்தான் உங்களுக்காக இதுபோன்ற எடையைக் குறைக்கும் உணவுகளை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், இவற்றை நீங்கள் இரவில் சாப்பிட்டு வந்தால் தொப்பை கொழுப்பை சுலாமாக கரைக்கலாம்.
பொதுவாக நமது உடல் எடை சரியான அளவில் இல்லையென்றால் ஏராளாமான சிக்கல்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடை அதிகரிப்பால் சர்க்கரை நோய் முதல் இதய நோய்கள் வரை தொடர்ச்சியாக பல நோய்களின் ஆக்கிரமிப்பை நமது உடலானது எதிர்கொள்ள வாய்ப்புள்ளது. எனவே உடல் எடையை குறைக்க இரவில் என்ன சாப்பிட வேண்டும் என்பதை பார்ப்போம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளிகள் பேரிச்சம்பழம் சாப்பிடலாமா?
தயிர்
இரவில் சாப்பிட்ட பின் கண்டிப்பாக தயிர் சாப்பிட வேண்டும், கலோரிகள் மற்றும் புரதச்சத்து அதிக அளவில் உள்ள தயிர், தசைகளுக்கும் பலம் தரும். , தயிரில் உள்ள நுண்ணூட்டச்சத்து செரிமானத்தை சீராக பராமரித்து உடல் எடையையும் குறைக்கிறது.
பாதாம்
பல சமயங்களில், இரவில் திடீரென பசி எடுக்கும், சில காரணங்களால் தாமதமாக தூங்குபவர்களுக்கு இது அடிக்கடி நிகழ்கிறது. அப்படி இரவில் பசிக்கும்போது பாதாம் சாப்பிடலாம், இது பசியை அடக்குவதோடு, ஆரோக்கியத்தை நிச்சயமாக கெடுக்காது என்பதை உறுதியாக சொல்லலாம். பாதாமில் காணப்படும் பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. அது மட்டுமல்ல, பாதாமில் கலோரிகளும் குறைவாக உள்ளன.
பீனட் பட்டருடன் ஹோல் கிரேன் பிரட்
இரவில் பசி எடுத்தால், பீனட் பட்டர் தடவி 2 துண்டுகள் ஹோல் கிரேன் பிரட்டை சாப்பிடலாம். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடை குறைக்க உதவுகிறது.
வாழைப்பழம்
வாழைப்பழம் சாப்பிடுவது எடை அதிகரிக்கும் என்று பெரும்பாலும் நம்பப்படுகிறது, ஆனால் எடையைக் குறைக்கும் பல ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகின்றன. வாழைப்பழத்தில் உள்ள நார்ச்சத்து காரணமாக, நீண்ட நேரம் பசி இருக்காது, இது எடை குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து சோர்வை நீக்கும் ‘சில’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ