புதுடெல்லி: பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதுடன் குறைந்த அளவு கொழுப்பு மட்டுமே உள்ளது என்பது மிகவும் நல்ல செய்தியாகும். எனவே, கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்க விரும்புபவர்கள், உணவில் பேரீச்சம்பழத்தைச் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பின் அளவைக் குறைக்க ஒரு நாளைக்கு எத்தனை பேரீச்சம்பழம் சாப்பிட வேண்டும் என்பதைத் தெரிந்துக் கொள்வது நல்லது. பேரிச்சம்பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகக் கருதப்படுகிறது மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
கனிமங்கள், சர்க்கரை, கால்சியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பேரிச்சம்பழத்தில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. நாள் முழுவதும் உடலில் ஆற்றல் சுழற்சியை ஊக்குவிக்கின்றன. பேரிச்சம்பழம் என்பது அனைத்து தாவரப் பொருட்களைப் போலவே கொலஸ்ட்ரால் இல்லாத ஒரு வகை பழமாகும்.
இறைச்சி, வெண்ணெய் மற்றும் பாலாடைக்கட்டி போன்ற விலங்கு உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் காணப்படுவதால், உங்கள் உணவில் பேரீச்சம்பழங்கள் கொண்ட தின்பண்டங்களை மாற்றுவது உங்கள் தமனிகளை தெளிவாக வைத்திருக்க உதவும்.
மேலும் படிக்க | சருமத்தில் சொறி, அரிப்பு தொல்லையா? இந்த வீட்டு வைத்தியங்களால் நிவாரணம் பெறலாம்
இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால், பக்கவாதம் போன்ற பல்வேறு சுகாதார நிலைகளுக்கு சிகிச்சையளிப்பதில் அதிசயமான பலன்களை கொண்டுள்ளது பேரிட்சை.
பேரிச்சம்பழம் கெட்ட கொழுப்பைக் குறைக்குமா?
எல்.டி.எல் அல்லது கெட்ட கொலஸ்ட்ராலை எளிதில் குணப்படுத்த பேரிச்சம்பழம் உதவும். இரத்த நாளங்களைச் சுத்தப்படுத்தி, கொழுப்புகள் இதயத்தில் சேராமல் தடுக்கவும், இரத்தக் கட்டிகளை உண்டாக்கும் சிக்கலில் இருந்து தீர்வு காணவும் இந்த அபூர்வ பழம் உதவுகிறது.
தினசரி உணவில் பேரீச்சம்பழங்களை சிறிய அளவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிக்க உதவும்.
மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகரித்தால் இந்த அறிகுறிகள் தோன்றும்
பேரிச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் மிகக் குறைந்த கொழுப்பு உள்ளது என்பதால், பக்கவாதம், பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றைத் தடுக்கவும் பேரிச்சம்பழம் உதவும்.
பேரிச்சம்பழத்தில் துத்தநாகம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை உடலுக்கு ஊட்டமளிக்கும். துத்தநாகம் இன்சுலின் உற்பத்திக்கு உதவுகிறது, அதே நேரத்தில் மெக்னீசியம் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது.
கொலஸ்ட்ராலைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அதே வேளையில், ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு பேரீச்சம்பழங்கள் சாப்பிட்டாலே போதும்.என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், பேரிட்சையில் சர்க்கரையும் உள்ளதால், அதை, அதிகமாகக் உண்பதும் தேவையற்ற விளைவுகளைக் கொடுக்கலாம். என்பதை கவனத்தில் வைத்துக் கொள்
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ