Ginger Water Health Benefits: இஞ்சி ஊட்டச்சத்து நிறைந்த ஒன்றாகும். நம் வீட்டு உணவுகளிலும், வைத்தியங்களிலும் இஞ்சி தவிர்க்க முடியாத ஒன்றாகும். இஞ்சி துவையல், இஞ்சி பச்சடி என சில உணவுகளுக்கு சைட் டிஷ்ஷாகவும் இஞ்சி இருக்கிறது. அனைத்து மெயின் டிஷ்களிலும் இஞ்சி பெரும்பாலும் சேர்க்கப்பட்டுவிடும். இஞ்சி தரும் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன.
இஞ்சியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் ஏராளமாக இருக்கிறது. இது செரிமான பிரச்சனையில் இருந்து உடல் வீக்கம் வரை பல விஷயங்களில் தீர்வாக செயல்படுகிறது. உடல் எடை குறைப்புக்கும் இஞ்சி உதவுகிறது. இஞ்சியில் ஜிஞ்சரால், ஷோகோல் மற்றும் ஜிங்கிபெரீன் போன்ற சக்திவாய்ந்த மூலக்கூறுகள் உள்ளன, அவைதான் இஞ்சியின் மருத்துவ குணங்களுக்கு பங்களிக்கின்றன.
இஞ்சி தண்ணீர் செய்முறை
அந்த இஞ்சி தண்ணீரை நீங்கள் சாப்பிட்டுக்கு பின்னர் அருந்தினால் உடலுக்கு இந்த 5 ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், இதனை நீங்கள் தினமும் பருகலாம். இஞ்சி தண்ணீரை தயாரிக்க நீங்கள் இஞ்சியை வேரில் இருந்து எடுத்து கழுவி நன்கு தோல் நீக்கப்பட்ட நிலையில் எடுத்துக்கொள்ளவும். அதை தண்ணீரில் இட்டு நன்கு கொதிக்கவிடவும். நன்கு கொதித்த பின்னர் அதை சூடு ஆறவைத்து, இஞ்சித்துண்டை வெளியே எடுத்து அந்த நீரை பருகலாம். வேண்டுமென்றால் தேன் கலந்துகொள்ளலாம். இஞ்சியை சமையலுக்கும் பயன்படுத்தலாம். இந்த இஞ்சி தண்ணீரை குடிப்பதால் வரும் நன்மைகளை இங்கு காணலாம்.
மேலும் படிக்க | வயிற்று புற்றுநோயை முன்கூட்டியே காட்டும் 5 முக்கிய அறிகுறிகள்..!
கிடைக்கும் 5 நன்மைகள்
- இஞ்சி தண்ணீர் வளர்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தும். இதனால் உடல் எடை சீராக குறையும். இதில் உள்ள மூலக்கூறுகள் ஆற்றலை அதிகரிக்கச் செய்து, கொழுப்பை குறையும், தேவையின்றி பசியெடுப்பதை குறைக்கும்.
- இஞ்சி தண்ணீர் நோய் எதிர்ப்பில் சிறந்த ஒன்று, நோயை உங்களை அண்டவிடாது. வைட்டமிண் சி, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்டவை கிருமிகளுடன் சண்டையிட்டு அலர்ஜியை தடுக்கும், நோய் எதிர்ப்பு செல்களை முடுக்கிவிடும்.
- உணவு உண்ட பின் இஞ்சித் தண்ணீர் குடிப்பதால் நெஞ்செரிச்சலுக்கு நல்ல தீர்வாக அமையும். இஞ்சியில் உள்ள ஜிஞ்சரால் என்ற அலர்ஜி எதிர்ப்பு மூலக்கூறுகள் செரிமான கோளாறுகளை தணிக்கும். உணவுக்குழாய்க்கும் இது நிவாரணம் அளிக்கிறது.
- இஞ்சி தண்ணீர் உங்கள் உடலில் இருக்கும் கெட்ட விஷயங்களை வெளியேற்ற உதவும். இஞ்சியின் சிறப்பான மூலக்கூறுகள் செரிமான நொதிகள், கல்லீரல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, ஆண்டிஆக்ஸிடன்ட்கள் தேவையற்ற செல்களை நீக்கி அசுத்தங்களை போக்குகின்றன. இதனால், செல்கள் புதுபிப்பதை ஊக்கப்படுத்தும், ஆரோக்கியம் நிலைநாட்டப்படும்.
- இஞ்சி தண்ணீர் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவும். இதனால் திசுக்கள் ஊட்டம் பெறும். இதை நீங்கள் தொடர்ந்து குடிப்பதன் மூலம் ரத்த அழுத்தம் சீராகவே இருக்கும். ஆக்ஸிஜன் ரத்தம் மூலம் சீராக சென்று சேரும். இதய ஆரோக்கியம் நலமாக இருக்கும்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனையை பெறுவது நல்லது. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ