நமது முடி வளர்ச்சியில் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை ஆகியவை முக்கிய பங்கினை வகிக்கிறது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கம் வறண்ட, உதிர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை ஏற்படுத்துகின்றன. மன அழுத்தமும் முடி உதிர்விற்கு வழிவகுக்கிறது, நாம் சில ஆரோக்கியமான உணவுமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் பின்பற்றுவதினால் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். வாழைப்பழங்கள் முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். வைட்டமின்கள், மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சிலிக்கான் ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாக விளங்கும் வாழைப்பழம் பல்வேறு ஊட்டச்சத்து கூறுகளைக் கொண்டுள்ளன, அவை உங்கள் சேதமடைந்த முடியை மீட்டெடுக்க உதவும். வாழைப்பழ பேக் தலைமுடிக்கு இயற்கையான சூப்பர் கண்டிஷனராகக் கருதப்படுகிறது மற்றும் வாழைப்பழ ஹேர் மாஸ்க் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக பொடுகு தொல்லையை சரிசெய்கிறது.
மேலும் படிக்க | முடி அதிகம் உதிர்கிறதா? இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க!
உங்கள் தலைமுடியை வறண்டு போகாமல் வைத்திருக்கவும், முடி உதிர்வை தடுக்கவும் ஒரு வாழைப்பழத்தை பால் அல்லது கிரீம் கலந்து வீட்டில் ஹேர் மாஸ்க் ஆக பயன்படுத்தலாம். 1 வாழைப்பழம், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் மற்றும் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் பேஸ்ட் போல அரைத்து, உங்கள் தலைமுடியில் தடவி 20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஹேர் பேக்கை ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இந்த பேக் உங்கள் தலைமுடிக்கு ஊட்டமளிப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை வழங்குவது முக்கியம்.
வறண்ட மற்றும் உதிர்ந்த கூந்தலைக் கட்டுப்படுத்த நீங்கள் வீட்டில் முயற்சி செய்யக்கூடிய மற்றொரு வாழைப்பழ பேக் பற்றி பார்க்கலாம். ஒரு டேபிள் ஸ்பூன் கண்டிஷனர், பாதி மசித்த வாழைப்பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தயிர், மற்றும் 2-3 சொட்டு லாவெண்டர் எண்ணெய் அனைத்தையும் கலந்து மாஸ்க் தயாரிக்கவும். அதை தலையில் தேய்த்து 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் அலசினால் மிருதுவான மற்றும் பளபளப்பான முடியை உடனடியாக பெறலாம். மற்றொரு பயனுள்ள வாழைப்பழ ஹேர் மாஸ்க் என்னவென்றால், 1 பழுத்த வாழைப்பழத்தை 1 ஸ்பூன் வெண்ணெய் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் கலந்து அதை உங்கள் தலையில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து அலச வேண்டும்.
மேலும் படிக்க | இந்த அறிகுறிகள் இருக்கிறதா? சிறுநீரக பாதிப்பாக இருக்கலாம்! ஜாக்கிரதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ