தினமும் காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால், கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் ஏராளம் என்பதை மறுக்க முடியாது. உடல் எடை குறையும் என்பதோடு, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் அருமருந்து எனலாம். சிறந்த டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும். இதனால் உடலில் உள்ள பழைய என்ஸைம்கள் வெளியேறி, புதிய அமிலங்கள் உற்பத்தியாகின்றன. இதனால், செரிமான மண்டலம் சிறப்பாக இருக்கும். இதனால், வயிற்று வலி, உப்புசம், வாயு போன்ற பிரச்சனைகள் தீரும் ஆனால், அளவுக்கு அதிகமாக எதையும் அருந்துவது, பாதிப்பையே உண்டு செய்யும் என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
அளவிற்கு அதிகமான வெந்நீர் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
சிறுநீரகம் பாதிப்பு
வெந்நீரைக் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும் என்றாலும், அளவிற்கு அதிகமாக வெந்நீரை குடிப்பதால் சிறுநீரகம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இது கிட்னி ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். நீண்ட காலத்திற்கு, அளவிற்கு அதிகமாக வெந்நீர் குடித்து வந்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் வாய்ப்பு கூட உள்ளது என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
கல்லீரல் பாதிப்பு
கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது அவர்களின் கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். அவர்கள் சாதாரண நீரை குடிப்பது தான் நல்லது. மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும். கல்லீரல் மிகவும் உணர்திறன் வாய்ந்த உறுப்பு. அதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், உடலின் பல்வேறு செயல்பாடுகள் மோசமாக பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
மூளையின் செயல் திறன் பாதிப்பு
தொண்டையில் பிரச்சனை இருந்தால் வெந்நீர் குடிக்கலாம். ஆனால், காரணம் ஏதும் இல்லாமல் வெந்நீரை அளவிற்கு அதிகம் குடித்தால், மூளைத் திறன் பாதிக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகப்படியான வெந்நீரைக் குடிப்பதால் மூளை செல்களில் வீக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும், இதனால் மூளை தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் படிக்க | தினம் 2 நிமிடம் போதும்... 30 நாட்களில் தொப்பையை கரைக்கும் பிளாங்க் பயிற்சி
தூக்கமின்மை பிரச்சனை
இரவில் தூங்கும் முன் வெந்நீரை குடிப்பதால், இரவில் சரியாக தூக்கம் வராது. இரவில் வெந்நீர் குடிப்பதால் சிறுநீர் பெருகி, அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை ஏற்படலாம். இதன் காரணமாகவும் உங்கள் தூக்கம் கெடலாம். எனவே வெந்நீரை அளவோடும் அருந்தி, உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
அதிக வெந்நீரைக் குடிப்பதால் எலக்ட்ரோலைட்டுகள் நீர்த்துப் போகும்
அதிக அளவிலான வெந்நீர் உடலில் நீர் சத்து குறைபாட்டை ஏற்படுத்தக் கூடும், இரத்தத்தில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் சமநிலை பாதிக்கப்பட்டு, செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மூளையில் மண்டை ஓட்ட்டில் அழுத்தத்தை ஏற்படுத்தி, தலைவலி மற்றும் பிற பிரச்சனைகளைத் தூண்டும் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.
சளி மற்றும் இருமல் நோயாளிகள்
சளி மற்றும் இருமலால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அளவிற்கு அதிக வெந்நீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் தொண்டை வீக்கம் மற்றும் எரிச்சல் அதிகரிக்கும். மாறாக, அவர்கள் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது.
அதிக வெந்நீர் குடிப்பதால் புண் ஏற்படும் ஆபத்து
சில நேரங்களில் அதிக சூடான நீரை உட்கொள்வது உணவுக்குழாய் மற்றும் செரிமான மண்டலத்தையும் சேதப்படுத்தும். வெந்நீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலையை விட அதிகமாக இருப்பதால், உங்கள் உள் உறுப்புகளில் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ