Indian team to be announced today: 2017ஆம் ஆண்டுக்கு பிறகு 7 ஆண்டுகள் கழித்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் குரூப் ஏ பிரிவிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பி பிரிவிலும் இடம் பிடித்துள்ளன.
இத்தொடர் இம்முறை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. கடையாக ஐசிசி தொடர் பாகிஸ்தானில் 1996ஆம் ஆண்டு தான் நடைபெற்றது. அனைத்து போட்டிகளும் பாகிஸ்தான் நடைபெற இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளை தவிர்த்து மற்ற நாட்டின் கிரிக்கெட் வாரியங்கள் அந்தந்த நாட்டின் அணிகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டன. இந்தியா அணிகளின் அறிவிப்பு குறித்து ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கின்றனர்.
இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று(ஜன.18) அறிவிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய அணி குறித்த அறிவிப்பை இந்திய தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் இன்று(ஜன.18) பிற்பகலில் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அணி தேர்வில் இருக்கும் சவால்கள்
2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பைக்குப் பிறகு காயம் காரணமாக இந்திய அணியில் விளையாடாமல் இருந்த முகமது ஷமி இந்தியா - இங்கிலாந்து டி20 தொடரின் அணி அறிவிப்பின் மூலம் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால், சாம்பியன்ஸ் டிராபியில் அவரது வருகை கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இருப்பினும் மிக முக்கிய பந்து வீச்சாளரான ஜஸ்ரித் பும்ரா பார்டர் கவாஸ்கர் தொடருக்கு பின்பு தசைப் பிடிப்பால் அவதிப்பட்டு வரும் நிலையில், அவர் சம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் என இவர்களில் யாரை தேர்வு செய்வார்கள் என குழப்பங்கள் நிலவி வருகிறது. இந்நிலையில், இன்று இந்த அனைத்து குழப்பத்திற்கும் தீர்வு எட்டப்படும்,. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் எந்தந்த வீரர்கள் இடம் பெறப் போகிறார்கள் என்பது இன்று தெரியவரும்.
மேலும் படிங்க: அந்த குழந்தையா இது?! ஹீரோயின் கணக்கா வளர்ந்துட்டாரே! வைரல் போட்டோஸ்..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ