பான் கார்டு மூலம் ரூ.5,000 வரை கடன் பெறுங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி?

PAN Card Loan | பான் கார்டு மூலம் ரூ.5,000 வரை கடன் பெற முடியும், விண்ணப்பிப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 18, 2025, 07:15 AM IST
  • பான் கார்டு மூலம் லோன் பெறலாம்
  • உடனடி தேவைக்கு ரூ.5000 வரை கிடைக்கும்
  • ஒரே நாளில் கடன் தொகையை பெறலாம்
பான் கார்டு மூலம் ரூ.5,000 வரை கடன் பெறுங்கள்..! விண்ணப்பிப்பது எப்படி? title=

PAN Card Loan | பான் கார்டு கடன்: அவசரகாலத்தில் உங்களுக்கு உடனடியாக பணம் தேவைப்பட்டால், தனிநபர் கடன் (Personal Loan) ஒரு சிறந்த வழி. இதன் மூலம் நீங்கள் உடனடியாக பணம் பெறுவது மட்டுமல்லாமல், அதை திருப்பிச் செலுத்தவும் பல வழிகள் உள்ளன. இப்போது நீங்கள் பான் கார்டு உதவியுடன் ரூ.5,000 வரை கடனைப் பெறலாம். இதற்கு விண்ணப்பிக்கும் செயல்முறையும் மிகவும் எளிதானது. பான் கார்டை வைத்து கடன் பெறுவது எப்படி? விண்ணப்பிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்வோம்.

பான் கார்டு கடன்

ஆதார் மற்றும் வாக்காளர் ஐடியைப் போலவே, பான் கார்டும் மிக முக்கியமான ஆவணமாகும். நீங்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும் போதெல்லாம், பெரும்பாலும் பான் கார்டு தேவைப்படுகிறது, ஆனால் இப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் பான் கார்டில் ரூ.5,000 வரை கடனைப் பெறலாம். டிஜிட்டல் கடன் வழங்கும் செயலிகள் மற்றும் NBFC -கள் இந்த வகையான கடனை வழங்குகின்றன. பல வங்கிகளும் இப்படியான கடனை வங்குகின்றன.

PAN கார்டு மூலம் கடனுக்கு விண்ணப்பிப்பது எப்படி?

1. முதலில், எந்த வங்கி இப்படியான கடனை வழங்குகிறது? அல்லது எந்த NBFC குறைந்த அளவு தொகையில் கடன்களை வழங்குகிறது என்பதைக் கண்டறியவும். அதாவது எக்விடாஸ் உள்ளிட்ட சிறு கடன் நிதி நிறுவனங்கள். 

2. இப்போது அதற்கு எவ்வளவு வட்டி வசூலிக்கப்படுகிறது, செயலாக்க கட்டணம் என்ன, கடனை எவ்வளவு நேரத்தில் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். கடன் வாங்கும்போது இதனை தெரிந்து கொள்வது அவசியம்.

3. இப்போது கடன் வழங்குபவரின் வலைத்தளத்திற்குச் செல்லவும் அல்லது உங்கள் ஊரில் கிளை இருந்தால் நேரடியாக செல்லவும்.

4. அப்போது, உங்களுக்கு எவ்வளவு கடன் வேண்டும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்ன போன்ற பல முக்கியமான தகவல்களை நீங்கள் வழங்க வேண்டியிருக்கும்.

5. உங்கள் PAN கார்டை உங்கள் அடையாளச் சான்றாக கொடுக்க வேண்டியிருக்கும். சில இடங்களில், நீங்கள் ஆதார் அட்டை அல்லது வருமானச் சான்றையும் வழங்க வேண்டியிருக்கும்.

6. கொடுக்கப்பட்ட தகவல்கள் சரியாக இருந்தால், கடன் உடனடியாக அங்கீகரிக்கப்படும். இருப்பினும், அத்தகைய கடன்களுக்கான வட்டி அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஏனெனில் இத்தகைய கடன்கள் பாதுகாப்பற்றவை என்பதால் அவற்றுக்கான உத்தரவாதமாக எதையும் கொடுக்க வேண்டிய தேவையிருக்காது. அதன் காரணமாகவே வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

மேலும் படிக்க | கடைசி தேதி ஜனவரி 23.. வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி எச்சரிக்கை!

மேலும் படிக்க | வருகிறது 8ஆவது ஊதியக்குழு: இப்போ ரூ.40 ஆயிரம் வாங்கினால், இனி மாதச் சம்பளம் எவ்வளவு உயரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News