முழங்கால் வலிக்கு தீர்வு: முழங்கால் வலி என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற வலிகளுக்கு மருந்து உட்கொள்வது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். வயதுக்கு ஏற்ப முழங்கால் வலி அதிகரிக்கும். அதனால்தான் உங்கள் உணவில் சில ஆரோக்கியமான விஷயங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதனால் மூட்டு வலியில் இருந்து நிறைய நிவாரணம் பெறலாம். எனவே மூட்டு,முழங்கால் வலி 5 நிமிடத்தில் போக்க இங்கு சில வீட்டு வைத்திய குறிப்புகளை நாங்கள் கொடுத்துள்ளோம், இதனால் நீங்கள் கட்டாயம் நிவாரணம் பெறுவீர்கள்.
தயிர்
தயிர் கால்சியத்தின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. எனவே இதனை உணவில் சேர்த்துக் கொண்டால், அது உங்கள் எலும்புகளை வலுவடையச் செய்து, உடலுக்கு வலிமையைக் கொடுக்கும்.
மேலும் படிக்க | வேகவைத்த ஆப்பிள் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
வெல்லம்
நம் உணவில் சர்க்கரைக்கு பதில் வெல்லத்தைப் பயன்படுத்தினால், அது கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், அது உடலுக்கு நன்மை பயக்கும். இது உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். எனவே, முழங்கால் வலிக்கு வெல்லம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துளசியை பயன்படுத்தவும்
துளசி கீல்வாதத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, ஏனெனில் இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஸ்பாஸ்மோடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே இது மூட்டுவலிக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. முழங்கால் வலியில் நிவாரணம் பெற துளசி டீயை ஒரு நாளுக்கு 3-4 முறை அருந்தலாம்.
வெந்தய விதைகள்
வெந்தய விதைகளின் பயன்பாடு முழங்கால் வலிக்கு பெரும் நிவாரணம் அளிக்கிறது. இதை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதற்கு, வெந்தயப் பொடியை அரை டீஸ்பூன் அளவு காலையிலும் மாலையிலும் உணவு உண்டவுடன் வெதுவெதுப்பான நீரில் எடுத்துக் கொள்ளவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ