முடி வளர்ச்சிக்கு சிறந்த வீட்டு வைத்தியம்: முடி தொடர்பான பல பிரச்சனைகளில் ஒன்று தான் முடியின் வறட்சி. வறண்ட முடியை மென்மையாக்க, பல பெண்கள் சலூனில் இருந்து கெரட்டின் சிகிச்சையை எடுத்துக்கொள்கிறார்கள், மேலும் மென்மையாக்குகிறார்கள். ஆனால், இவற்றின் காரணமாக, பாக்கெட்டில் பெரிய பாதிப்பு ஏற்படுவது மட்டுமில்லாமல், கூந்தலுக்குன சேதம் ஏற்படுத்தும். அத்தகைய சூழ்நிலையில், இது போன்ற கெமிக்கல் சிகிச்சையை நீங்கள் செய்ய விரும்பவில்லை என்றால், இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை நீங்கள் முயற்சி செய்யலாம். உண்மையில் நீங்கள் இந்த சிகிச்சைக்கு அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை. அந்த சிகிச்சை எவை என்பதையும், அதனால் என்ன பலன் என்பதை இப்போது அறிந்துக்கொள்வோம்.
பட்டுப் போன்ற கூந்தல் பெற மோரை எப்படி பயன்படுத்துவது | How To Use Buttermilk For Silky Hair
மோர் பொதுவாக உணவின் ஒரு பகுதியாகும். மோர் (Buttermilk) ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மற்றும் செரிமானத்தை ஆரோக்கியமாக வைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். ஆனால், அதன் நன்மைகள் இதற்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை. ஆம், மோரின் நன்மைகளை நாம் கூந்தல் பராமரிப்பிலும் பெறலாம்.
தலைமுடியில் மோர் தடவுவதற்கான சிறந்த வழி, அதைக் கொண்டு முடியைக் கழுவது தான். மோர் கொண்டு தலைமுடியைக் கழுவினால், கூந்தல் பட்டுப் போல மென்மையாக மாறும். மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது, இவை உச்சந்தலையை எக்ஸ்ஃபோலியேட் செய்கிறது. இது உச்சந்தலையில் உள்ள இறந்த செல்களை அகற்றி, முடியை நன்கு சுத்தம் செய்கிறது. இது தவிர, மோர் முடியை மென்மையாகவும் அடர்த்தியாகவும் மாற்றும்.
மோர் கொண்டு முடியைக் (Hair Care) கழுவுவதற்கு, முதலில் அதை உச்சந்தலையில் தேய்த்து, பின்னர் முடியின் முனையிலிருந்து வேர்கள் வரை தேய்க்கவும். சிறிது நேரம் விரல்களால் கூந்தலில் மசாஜ் செய்தால் ரத்த ஓட்டம் நன்றாக இருக்கும். மோரை உச்சந்தலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவிடவும். அதன் பிறகு, தலைமுடியில் தண்ணீர் ஊற்றி கழுவவும். மோர் கொண்டு முடியைக் கழுவிய பின் கண்டிஷனரைப் பயன்படுத்தலாம். இது கூந்தலை மேலும் அழகாக மாற்றும்.
மோர் கொண்டு முடியைக் கழுவுவதால் கிடைக்கும் நன்மைகள்
* முடி உதிர்வை தடுக்க உதவும்.
* பொடுகை குறைக்க உதவும்.
* கூந்தலை பளபளப்பாக மாற்ற உதவும்.
* வெள்ளை முடியை / நரை முடியை கருப்பாக்க உதவுகிறது.
மோரில் காணப்படும் சத்துக்கள்
மோரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் டி, ஏ, பி-12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் ஆகியவை உள்ளது, இது முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் கார்போஹைட்ரேட் மற்றும் அவற்றை பளபளப்பாகவும், நீளமாகவும், உச்சந்தலையில் ஊட்டமளிக்கவும் உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | சிறுநீரக புற்றுநோயின் அறிகுறிகள் இவை தான்! அலட்சியப்படுத்த வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ