உலகிலேயே அதிக அளவிலான சர்க்கரை நோயாளிகள் இருக்கின்றனர். உலகில் உள்ல நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கையில் ஆறில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளனர் என்று ICMR வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் இரத்த சர்க்கரை அளவுகள், அல்லது ஹைப்பர் கிளைசீமியா, நீரிழிவு நோய்க்கு (வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு) முக்கிய காரணமாகும். இரத்த குளுக்கோஸ் அளவு சாதாரணமாக இல்லை என்பதை எப்படி அறிவது? 140 mg/dL (7.8 mmol/L) க்கும் குறைவான இரத்த சர்க்கரை அளவு சாதாரணமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். உணவு சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு 200 mg/dL (11.1 mmol/L) என்பதை விட ரத்த சர்க்கரை அளவு அதிகமாகப் இருந்தால் நீரிழிவு நோய் இருப்பதாக அர்த்தம்.
சர்க்கரை நோயின் தேசம் இந்தியா
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் நீரிழிவு நோயாளிகள் அதிகமாக உள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 150 சதவீதம் உயர்வு இருப்பது கவலைகளை அதிகரிக்கின்றன.
மேலும் படிக்க | Health Alert: சிறுநீரக கல் இருந்தால் ‘இந்த’ உணவுகளுக்கு NO சொல்லுங்க!
நீரிழிவு நோயின் அறிகுறிகள்
நீரிழிவு நோய் இல்லாதவர்கள், இந்த நோயின் பாதிப்பு இருப்பதை எப்படி அறிந்துக் கொள்வது? அறிகுறிகள் மூலம் சுலபமாக அறிந்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருந்தால், உடனடி சிகிச்சையை எடுத்துக் கொள்வதும், வாழ்க்கை முறையில் மாறுதல்களை மேற்கொள்வதும் உதவியாக இருக்கும். நீரிழிவு நோயில், உயர் இரத்த குளுக்கோஸ் அளவுகளுடன் தொடர்புடைய சில அறிகுறிகள் இவை:
180 mg/dL க்கும் அதிகமான இரத்த சர்க்கரை
தாகம் அதிகரிப்பது
தொடர் தலைவலி
கவனமின்மை
பார்வை இழப்பு
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
மிகுந்த சோர்வு, பலவீனம்
திடீர் எடை இழப்பு
பசியின்மை
ஆறாத புண்கள்
நரம்புத் தளர்ச்சி
மன அழுத்தம் மற்றும் பதட்டம்
வேகமான இதயத் துடிப்பு
வியர்வை
இயற்கையாகவே நீரிழிவு நோயைக் குறைக்கலாம்
நீரிழிவு அதிகமானால், உடல் சேதம் அதிகமாகும். அந்த சேதங்களில் சில உயிருக்கு ஆபத்தானதாகவும் இருக்கலாம். எனவே, இந்த நிலையை எவ்வாறு சமாளிப்பது என்பதை அறிவது முக்கியம். முறையான மருந்துகள் மற்றும் மருத்துவரின் கவனிப்புடன் வாழ்க்கை முறை பழக்கங்களையும் சரிபார்க்க வேண்டும்.
மேலும் படிக்க | Anemia: மாதுளை - பீட்ரூட் மட்டுல்ல; இதுவும் ரத்த சோகையை குணப்படுத்தும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ