Illupai: ஆரோக்கியத்தின் விருட்சமாக விரியும் இலுப்பை! மருந்தே மரமாக உருவெடுத்ததோ?

Health Benefits of Mahua: ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கை என்பது பழமொழி... ஆனால் இலுப்பை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 27, 2022, 07:10 AM IST
  • மகத்தான நன்மைகளை அளிக்கும் இலுப்பை மரம்
  • இலுப்பை மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றன
  • ஆலையில்லா ஊரில் இலுப்பைப் பூ சர்க்கை என்பது பழமொழி
Illupai: ஆரோக்கியத்தின் விருட்சமாக விரியும் இலுப்பை! மருந்தே மரமாக உருவெடுத்ததோ? title=

புதுடெல்லி: மருத்துவ குணங்கள் கொண்ட ஏராளமான தாவர இனங்கள் இந்தியாவில் உள்ளன. அதில் ஒன்றுதான் இலுப்பை மரம். இலுப்பையின் அனைத்து பாகங்களுமே மருந்தாகப் பயன்படுகிறது. அதிலும் பழங்குடியினருக்கு, இந்த மரம் மகத்தான முக்கியத்துவம் வாய்ந்தது. பழங்குடியின மக்கள், இலுப்பையை உணவாகவும், எண்ணெயாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பது பலருக்கும் தெரியாத தகவல். பசுமையான மரமான இலுப்பை வனங்களிலும், சமவெளிப் பகுதிகளில் வளரக்கூடியது. இலுப்பைப் பூக்கள் மற்றும் பழங்கள் மிகவும் பலனுள்ளவை. இனிப்பு சுவை கொண்ட இலுப்பை, இயற்கையான இனிப்பாக பயன்படுத்தப்படுகிற்து. 

'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை' என்ற பழமொழி இலுப்பையின் அவசியத்தை உணர்த்துகிறது. நன்கு விளைந்த இலுப்பை மரத்திலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 200 கிலோ முதல் 300 கிலோ வரை இலுப்பைப் பூவை எடுக்கலாம். இந்தியா முழுவதும் பரவலாக காணப்படும் இலுப்பை மரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களிலும், குறிப்பாக இலுப்பைப் பழத்தில் புரதம், இரும்பு, கொழுப்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேரு ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன.

மேலும் படிக்க | கொழுப்பை குறைக்கணுமா? இந்த பழக்கத்தை எல்லாம் விட்டுடுங்க 

இலுப்பை பழம் உண்பதற்கு சுவையானது என்றால், இலுப்பை கொட்டையிலிருந்து எண்ணெய் கிடைக்கிறது. இலுப்பைப்பழங்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்து என்றால், இலுப்பையின் கொட்டையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் பல்வேறு நோய்களுக்கு நிவாரணியாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது.

இலுப்பை மரப் பட்டையின் சாறு காய்ச்சலுக்கு அற்புதமான சிகிச்சை அளிக்கிறது, நோய்களை நீக்கி ஆரோக்கியத்தை மீட்டெடுக்கிறது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலுப்பை இலையின் சாறு, ரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

மேலும் படிக்க | குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அடித்தளம் போடும் சுலபமான காலை உணவுகள்

 நரம்பு பலவீனம் மற்றும் நரம்புத்தசை அமைப்பில் உள்ள சிக்கல்களை சீர்செய்வதில் இலுப்பை உதவுகிறது. இலுப்பை இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குடிப்பது பல்வேறு நன்மைகளைக் கொடுக்கும்.

இலுப்பையின் விதைகள் தோல் பிரச்சினைகள், மூட்டுவலி, தலைவலியை போக்கும் வலிநிவாரணியாக பயன்படுகிறது. இலுப்பை விதையை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடிப்பது, உடல் ஆரோக்கியத்தைக் ரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்தும். ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

மேலும் படிக்க | காலை உணவுக்கு சூப்பர் உணவுகள்! நாள் முழுவதும் சுறுப்பாக வைக்கும் Super Foods

கடுமையான டான்சில்லிடிஸ் மற்றும் ஃபரிங்கிடிஸ் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பாலுடன் கூட்டு சேரும் இலுப்பை நல்ல பலனை அளிக்கும். முன்கூட்டியே விந்து வெளியேறுதல் அல்லது விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்களுக்கு இலுப்பை பூக்கள் சிறந்த மருந்தாகும். இலுப்பைப் பூக்களை உலர வைத்து பத்திரப்படுத்திக் கொண்டு, அதை பாலில் கொதிக்க வைத்து குடித்து வருவது நல்ல பலனைக் கொடுக்கும்.

இலுப்பையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தோல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலுப்பை இலைச்சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

”ஆலையில்லா ஊரில் இலுப்பை பூ சர்க்கரை” என ஒரு பழமொழி உண்டு. இலுப்பை மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | Cervical Pain: கழுத்து வலியில் இருந்து விடுபட சில எளிய பயிற்சிகள்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News