Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் விக்கல் வரும் என வேடிக்கையாக கூறுவார்கள். ஆனால் இது சரியான வாதம் அல்ல. இதற்குப் பின்னால் ஒரு அறிவியல் காரணமும் இருக்கிறது. எனவே விக்கல் ஏன் வருகிறது, அதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறிய முயற்சிப்போம்.
விக்கல்கள் தசைகளின் தன்னிச்சையான செயலால் ஏற்படுவதாகும். உதரவிதான தசைகள் திடீரென சுருங்கும்போது, அதை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகும் போது இது நிகழ்கிறது. இருப்பினும், இந்த விக்கல்கள் பொதுவாக சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஆனால், விக்கல் 48 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் போது, அது கவலைக்குரியதாகிறது
விக்கலுக்கான காரணங்கள்
பல சந்தர்ப்பங்களில், அதிக சூடாக அல்லது வேகமாக சாப்பிடும் போதோ அல்லது காரமான உணவை உண்ணும் போது விக்கல் ஏற்படுகிறது. இது தவிர, பலருக்கு அதிக உற்சாகம் அல்லது மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட விக்கல் வர ஆரம்பிக்கிறது. கல்லீரல் கோளாறு, நுரையீரல் நோய்த்தொற்று, மூளைக் காய்ச்சல், கணைய அழற்சி, குடல் அடைப்பு போன்றவற்றாலும் விக்கல் வரும்.
ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!
உங்களுக்கு நீண்ட காலமாக விக்கல் பிரச்சனை இருந்தாலோ, அடிக்கடி விக்கல் ஏற்பட்டாலோ, நீங்கள் ஒரு மருத்துவரை கலந்தாலோசிப்பது சிறந்தது.
விக்கல்களை நிறுத்த இந்த வழிகளை முயற்சிக்கலாம்
1. விக்கல்களை நிறுத்த, நீங்கள் சிறிது நேரம் மூச்சைப் பிடித்துக் கொள்வது பலன் தரும். சில நொடிகள் உங்கள் மூச்சைப் பிடித்துக் கொண்டிருப்பது, உதரவிதானத்தில் உள்ள பிடிப்பை அகற்ற உதவுகிறது, இதன் மூலம் விக்கல் நிற்கிறது.
2. இது தவிர விக்கல் வரும் போதெல்லாம் குளிர்ந்த நீரை அருந்தலாம். ஏனெனில் நீங்கள் தண்ணீரை விழுங்கும் போது, உதரவிதானம் சுருங்குவது, பிடிப்பை அகற்றுவது ஆகியவற்றில் உதவிடும்.
ALSO READ | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!
3. தொடர்ந்து விக்கல் பிரச்சனைகள் ஏற்பாட்டால், நாக்கை வெளியே நீட்டுவதன் மூலம் அதை நிறுத்தலாம். இது விசித்திரமாகத் தோன்றலாம். என்றாலும் இந்த வழி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உண்மையில், உங்கள் நாக்கு ஒரு அழுத்தப் புள்ளி. உங்கள் நாக்கை நீட்டுவது உங்கள் தொண்டையின் தசைகளைத் தூண்டுகிறது.
4. இது தவிர, விக்கல்களை நிறுத்த சரியான இடத்தில் வசதியாக உட்கார வேண்டும். இதற்குப் பிறகு, முழங்கால்களை உங்கள் மார்புக்குக் கொண்டு வந்து இரண்டு நிமிடங்கள் அந்த நிலையில் வைக்கவும். உங்கள் முழங்கால்களை நீட்டுவது மார்பை அழுத்துகிறது, இது உதரவிதானத்தின் பிடிப்பை போக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR