Rice vs Roti: உயிர் வாழ உணவு முக்கியம். பசிக்கு, ருசிக்கு என நம் வாழ்வில் இன்றியமையாத அம்சமாக உணவு உள்ளது. பெரும்பாலும் பலர் மதிய உணவில் 1 அல்லது 2 சப்பாத்திகளை உட்கொண்டு பிறகு சாதம் சாப்பிடுகிறார்கள். சிலர் சப்பாத்தி மட்டும் அல்லது சாதம் மட்டும் சாப்பிடும் பழக்கம் உடையவர்களாகவும் இருக்கிறார்கள். விருப்பத்தின் அடிப்படையிலும் இது மாறுபடுகின்றது.
ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு எந்த உணவு சிறந்தது? சப்பாத்தியா அல்லது சாதமா? இந்த விவாதம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. பொதுவாக தென் இந்தியாவில் அதிக அளவில் சாதமும் வட இந்தியாவில் அதிக அளவு சப்பாத்தியும் உட்கொள்ளப்படுகிறது. ஆனால், எது ஆரோக்கியமானது? மதிய உணவில் எதை சாப்பிட்டால் நல்லது? இதை பற்றிய சில தகவல்களை இங்கே காணலாம்.
சப்பாத்தியா, சாதமா? எது சிறந்தது?
சப்பாத்தி, சாதம் (Rice) என இரண்டிலுமே அவற்றின் தனிப்பட்ட நன்மைகள் உள்ளன. ஆனால் உங்கள் ஆரோக்கியத்தை மனதில் வைத்து ஒரு நல்ல விருப்பத்தை தேர்வு செய்ய விரும்பினால், இந்த இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அரிசி மற்றும் சப்பாத்தி என இரண்டிலும் கார்போஹைட்ரேட் உள்ளது. ஆனால் நார்ச்சத்து அரிசியில் குறைவாகவும், ரொட்டியில் அதிகமாகவும் உள்ளது. கூடுதலாக, அரிசி உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது, அதாவது இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்கும்.
சப்பாத்தி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
- சப்பாத்தியில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
- இது செரிமான செயல்முறையை மெதுவாக்க உதவுகிறது.
- சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
- சப்பாத்தியில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.
சாதம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
- கார்போஹைட்ரேட்டுகளுக்கு அரிசி ஒரு சிறந்த மாற்று.
- சாதம் சாப்பிடுவதால் நாள் முழுவதுக்கும் தேவையான ஆற்றலும் சக்தியும் கிடைக்கும்.
- அரிசியிலும் புரதச்சத்து மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது.
மேலும் படிக்க | சர்க்கரை நோய் - இதய நோய் ஆபத்தை அதிகரிக்கும் சில உணவுகள்... எச்சரிக்கும் ICMR
மதிய உணவை டிஃபன் பாக்சில் எடுத்துச்சென்று உணவு உட்கொள்ளும் நபர்களுக்கு சப்பாத்தி (Chapati) சிறந்ததாக கருதப்படுகின்றது. ஆனால், இதையும் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும். சத்தான காய்கறிகள் அல்லது பருப்புகளுடன் ரொட்டி சாப்பிடுவது நன்மை பயக்கும். உடல் எடையை குறைக்க ரொட்டி சாப்பிடலாம். ஒல்லியாக இருந்து எடையை கூட்ட விருப்பம் கொண்டவர்கள் சாதம் சாப்பிடலாம்.
சப்பாத்தி சாப்பிடுவதால், வேலை செய்ய வலிமை கிடைக்கிறது. சப்பாத்தியில் நார்ச்சத்து இருப்பதால், இது வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மதிய உணவில் சப்பாத்தி சாப்பிடுவதால், சோம்பல் பிரச்சனையும் ஏற்படாது. இது தவிர, பசையம் இல்லாத பொருட்களை சாப்பிட அறிவுறுத்தப்படுபவர்களுக்கு அரிசி சாப்பிடுவது ஆரோக்கியமாக இருக்கும். செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கும் சப்பாத்தியை குறைவாக சாப்பிட வேண்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | மாரடைப்பு வராமல் காக்கும் சூப்பர் உணவுகள்: மருத்துவரே பகிர்ந்த தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ