புதுடெல்லி: கொரோனா நெருக்கடியில் தற்போது அனைவரும் தங்கள் உடல்நிலையில் கவனம் செலுத்தி வருகின்றனர். எதைச் சாப்பிட வேண்டும், எதைச் சாப்பிடக் கூடாது என்பதில் முழு முக்கியத்துவம் மக்கள் செலுத்தி வருகின்றனர். முக்கனிகளுள் இரண்டாவது கனி பலாப்பழம். இந்தப் பழம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது.
பலாப்பழம் (Jackfruit) சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. பலாப்பழம் மருத்துவ குணங்கள் மிகுந்து இருக்கின்றது. பலாப்பழம் சாபிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று பார்போம்.
ALSO READ | Health Tips: மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்.!!
பலாப்பழத்தில் உள்ள சத்துக்கள்
மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது பலாப்பழத்தில் புரதத்தின் அளவு மிக அதிகம். குறிப்பாக அதன் விதைகளில். சைவ உணவு உண்பவர்கள் புரதச்சத்துக்கான பலாப்பழத்தை கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் கால்சியம், நியாசின், பொட்டாசியம், இரும்பு, ஃபோலிக் அமிலம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6, தயாமின் மற்றும் ரிபோஃப்ளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன.
* பலாச்சுளைகளில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது.
* பலாப்பழத்திலுள்ள விட்டமின் ‘ஏ’ சத்து, பார்வைக் குறைபாடு வராமல் தடுக்கிறது. மாலைக்கண் நோயையும் குணமாக்கும். தொடர்ச்சியாக பலா சாப்பிடுவோருக்கு கண் நோய்கள் வராது என்கிறது ஒரு ஆய்வு.
* நார்ச்சத்து அதிகம் உள்ள பழம் என்றால் அது பலாப்பழமே. மேலும் இது அல்சர், செரிமானக் கோளாறு, கண்களில் ஏற்படும் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மையை உடையது. இதில் கலோரி குறைவாக இருப்பதால் இதய நோய் இருப்பவர்களுக்கு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பழம்.
* பெண்களுக்கு ரத்தசோகை பிரச்சனை அடிக்கடி ஏற்படும். பலாப்பழத்தில் இரும்புச் சத்து அதிகம். இரத்த சோகையைத் தடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
* உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், பலாப்பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை சருமத்தின் சுருக்கங்களையும் வறட்சியையும் நீக்கும். இதில் வைட்டமின் சி மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.
(பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைக்கும் மாற்றாக இல்லை. பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.
ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR