இதய நோய் வரமால் தடுக்க சில வழிமுறைகளை பார்ப்போம்.

Last Updated : Sep 28, 2017, 02:29 PM IST
இதய நோய் வரமால் தடுக்க சில வழிமுறைகளை பார்ப்போம். title=

இதயம் அடிக்கடி வலிக்கும். இந்த வலி கை, கழுத்து, கன்னம், முதுகு, பல் போன்ற மற்ற பகுதிகளுக்கும் பரவும். உடற்பயிற்சி செய்யும்போதோ, பதற்றமாக இருக்கும்போதோ இந்த வலிகள் வரும். இதயத்தை பாதுகாத்து கொள்ள வேண்டிய வழிமுறைகள்.

# தினமும் உடற்பயிற்சி ஒரு மணி நேரம் செய்வது மிகவும் அவசியமான ஒரு செயல்களில் ஒன்றுயாகும்.

# உடல் பயிற்சி செய்யும் போது உடலில் இரத்த ஓட்டமானது சீராக இருக்கும் 

# பச்சை இலைக் காய்கறிகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்தை பழங்கள் மற்றும் காய்கறிகள் இதயத்தை பாதுகாக்கும்.

# குறைந்த கொழுப்புள்ள உணவுகள், பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், இதய நோய் வருவதை தடுக்க முடியும்.

# வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சாப்பிட்டால், ஹோமோசைஸ்டீனை சரியான அளவில் பராமரித்து வரலாம்.

# மனஅழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க தியானம், மூச்சு விடும் பயிற்சி போன்ற மனதை ரிலாக்ஸ் செய்யும் நல்லது. 

# பயிற்சி செய்து வந்தால் இதயத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
 
# எந்தவொரு அறிகுறி இல்லாமல் அதிகமாக வியர்வை வெளிவந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

# நெஞ்சு வலி, எரிச்சல், மன அழுத்தம், மூச்சுத் திணறல், வாந்தி, வியர்த்தல், உடல் குளிர்ச்சியடைதல், மாரடைப்புக்கான அறிகுறிகள் யாகும்.

# உப்பு அதிகமாக உட்கொள்ளும் போது இதய நோய்கள் உருவாகும். எனவே அதிகம் உப்பு எடுத்துக்கொள்வதை தவிர்ப்போம்.

#  ஆல்கஹாலை சரியதான அளவு குடித்தால் இதயத்திற்கு நல்லது. அதிகம் ஆல்கஹாலை எடுக்கும் பொது இதயம் பலவீனம் அடைகிறது. 

# மாட்டிறைச்சியில் கொழுப்பு அதிகம் இருப்பாதால் இதய நோய் உள்ளவர்கள் சாப்பிட கூடாது.

# அதிகமான வேலைப் பளுவினால் நாம் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறோம். 

# இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களில் புகைப்பிடிப்பது முக்கியமான ஒன்றுயாகும்.

Trending News