ஒருவர் உங்களை பார்த்துக்கொண்டே இருந்தால் ‘இது’தான் அர்த்தம்! என்ன தெரியுமா?

Reasons Why Someone Is Making Eye Contact With You : ஒரு ஆணோ, பெண்ணோ, உங்களை ஒருவர் பார்த்துக்கொண்டே இருந்தால் அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இங்கே பார்க்கலாம்.

Reasons Why Someone Is Making Eye Contact With You : சாதாரணமாக, பேருந்தில் செல்லும் போது, சாலையில் நடந்து செல்லும் போது, அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது யாரேனும், நம்மை சுற்றி இருப்பவர் நம்மை பார்த்துக்கொண்டே இருப்பது போல தோன்றும். அவருடன் அடிக்கடி ஐ காண்டேக்ட் நிகழும். இது பல மணி நேரங்கள் தொடரலாம் அல்லது பல நாட்கள் தொடங்கலாம். இப்படி, ஒருவர் உங்களை தொடர்ந்து கண்ணோடு கண் பார்த்துக்கொண்டே இருந்தால் அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

1 /8

மரியாதை: ஒருவர் பேசுகையில், அவரை கண்ணோடு கண் பார்ப்பது நம் கலாச்சாரத்தில் மரியாதையாக பார்க்கப்படுகிறது. எனவே, ஒருவர் உங்களுடன் ஐ காண்டேக் வைத்துக்கொள்கிறார் என்றால் அது மரியாதை நிமித்தமாக இருக்கலாம். 

2 /8

பதற்றம்: ஒரு சிலர், தங்களுக்குள் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக கூட எதேச்சியாக ஒருவரின் கண்ணோடு கண் பார்க்கலாம். 

3 /8

கேட்பது: ஒருவர், நீங்கள் பேசும் போது உங்கள் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கிறார் என்றால், அவர் நீங்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 

4 /8

பிடித்தம்: ஆண் பெண் மீதோ, பெண் ஆண் மீதோ ஈர்க்கப்படும் போதும், இப்படி கண்ணோடு கண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கலாம். 

5 /8

காதல் மொழி: ஒருவர், உங்கள் மீது காதல் கொண்டிருக்கிறார் என்றால் அவர் உங்கள் கண்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். 

6 /8

ஆர்வம்: நீங்கள் பேசும் விஷயங்கள் மீது, அல்லது உங்கள் மீது ஒருவருக்கு ஆர்வம் இருக்கிறது என்றால், அவரது கண்களை நீங்கள் அடிக்கடி சந்திக்க நேரும். 

7 /8

இணைப்பு: ஒருவர், ஏதேனும் உங்களிடம் சொல்ல முயற்சிக்கிறார் என்றாலோ, அல்லது உங்களுடன் ஏதேனும் ஒரு இணைப்பை உணருகிறார் என்றாலோ, ஐ காண்டேக்ட் நடக்கும். 

8 /8

தைரியம்: ஒருவர், தைரியமாக உணருகிறார் என்றால் அவர் உங்களை கண்ணோடு கண் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.