புதுடெல்லி: பெண்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வது தொடர்பான நம்பிக்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. COVID-19 தடுப்பூசியின் தீங்கு விளைவிக்கும் பக்கவிளைவுகள், எதிர்காலத்தில் கருவுரும்போது பகக்விளைவை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தால், கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி பெற தயங்குகிறார்கள்.
COVID-19 தடுப்பூசி உலகெங்கிலும் பல நாடுகளில் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியாவில் தற்போது COVID தடுப்பூசி போடும் இயக்கம் தொடங்கிவிட்டது. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கு எதிராக தடுப்பூசி போடும் செயல்முறை மார்ச் முதல் நாளன்று தொடங்கியது.
நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்வீர்களா என்று பெண்களிடம் கேட்டால், இந்தியப் பெண்கள் தயங்காமல் முன்வருகின்றனர். உலகிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள தயாராக இருக்கும் பெண்களில் இந்திய வீரமங்கைகளே முதலிடத்தில் இருக்கின்றர்னர். இதை ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
Also Read | 15 நிமிடம் குறைவாக உறங்கினாலும், உடல் பருமன், sugar, BP எல்லாம் வரும்
ஹார்வர்ட் டி.எச். (Harvard T.H. Chan School of Public Health) ஆராய்ச்சியாளர்கள் நடத்திய கணக்கெடுப்பில் 16 நாடுகளைச் சேர்ந்த சுமார் 18,000 பெண்கள் பங்கேற்றனர். அக்டோபர் பிற்பகுதியிலிருந்து நவம்பர் மாத நடுப்பகுதி வரை இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தடுப்பூசிகள் மற்றும் கோவிட் -19 தொடர்பான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளித்தனர்.
90 சதவிகித செயல்திறனுடன் ஒரு கற்பனையான பாதுகாப்பான மற்றும் இலவச கோவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கான விருப்பத்தையும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டனர்.
மொத்த பங்கேற்பாளர்களில், ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கர்ப்பிணிப் பெண்களில் 52 சதவீதமும், கர்ப்பிணி அல்லாத பெண்களில் 73 சதவீதமும் தடுப்பூசி பெறுவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்கள். கணக்கெடுக்கப்பட்ட பெண்களில் 69 சதவீதம் பேர் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறினார்கள்.
Also Read | ஒற்றைத் தலைவலியும் (Migraine) அதற்கான காரணிகளும்!
இந்திய பெண்கள் மத்தியில் தடுப்பூசி போதுவதற்கான உத்வேகம் அதிகமாக இருக்கிறது. இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் 60 சதவிகித கர்ப்பிணிப் பெண்களும், இந்த நாடுகளில் 78 சதவீத கர்ப்பிணி அல்லாத பெண்களும் கோவிட் -19 தடுப்பூசியை போட்டுக் கொள்ளத் தயாராக உள்ளனர். இந்த நாடுகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடத் தயாராக இருக்கின்றனர்.
அமெரிக்காவிலும் ரஷ்யாவிலும் பெண்களிடையே தடுப்பூசி ஏற்றுக்கொள்வது கர்ப்பிணிப் பெண்களில் 45 சதவீதத்திற்கும் குறைவாகவும், கர்ப்பிணி அல்லாத பெண்களில் 56 சதவீதத்திற்கும் குறைவாகவும் இருந்தது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற மிகக் குறைந்த கோவிட் -19 வழக்குகளைக் கொண்ட நாடுகளிலும் இதே நிலை தான்.
கோவிட் -19 தடுப்பூசி தயக்கத்திற்கான காரணங்கள்
தடுப்பூசி ஏற்றுக்கொள்ளல் மற்றும் நம்பிக்கையை வடிவமைப்பதில் பல காரணிகள் பங்கு வகிக்கின்றன என்று ஆய்வறிக்கையின் மூத்த எழுத்தாளர் ஜூலியா வு கூறுகிறார். கோவிட் -19 இன் அச்சுறுத்தல், பொது சுகாதார நிறுவனங்களின் மீதான நம்பிக்கை நிலை மற்றும் தற்போதுள்ள COVID 19 தடுப்பூசி அணுகுமுறைகள் ஆகியவை இதில் அடங்கும்.
Also Read | Corona Test பரிசோதனை 3 நாட்களில் 3 முடிவை காட்டுமா? மாநில அமைச்சர் அதிர்ச்சி!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR