ஒவ்வொரு வருடமும் உலக பால் தினம் 2022 ஜூன் 1 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் பாலில் காணப்படுகின்றன, மேலும் இது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. அது எலும்புகளை வலுப்படுத்தும் அதோடு மட்டுமல்லாமல் நமது நோய் எதிர்ப்பு சக்தியையும் வளப்படுத்துகிறது. அது மட்டுமன்றி மன சோர்வு மற்றும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
இந்த நிலையில் பாலின் நன்மைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலக பால் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி பாலுடன் உட்கொள்ளும் சில உணவு வகைகளால் நம் உடலுக்கு தீங்கு விளையக்கூடும். அத்தகைய சில உணவை பற்றி தான் நாம் இன்று காண உள்ளோம்.
மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்
மீனுடன் பால்
பொதுவாக பால் நம் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். அதேபோல் மீன் சாப்பிடுவதன் மூலம் உடல் வெப்பநிலை அதிகரிக்கும். எனவே இந்த இரண்டு உணவையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் உடலில் சமநிலையின்மையை உருவாக்கும், மேலும் இவை இரண்டிலும் மாறுபட்ட தன்மைகள் இருப்பதால் ஒன்றாக சாப்பிடும் போது வயிற்று வலியை ஏற்படுத்தும். உணவுக்கு விஷத் தன்மையை கொடுக்கும்.
வாழைப்பழம்-பால்
பாலுடன் வாழைப்பழம் சாப்பிடுவதால் தசைகள் வலுவடையும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இந்த கலவையானது அஜீரணம் மற்றும் வயிற்றில் கனத்தை ஏற்படுத்தும். பால் மற்றும் வாழைப்பழம், இரண்டும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். எனவே வாழைப்பழத்தை பாலுடன் ஒன்றாக உட்கொள்வது செரிமான சக்தியை பலவீனப்படுத்தும்.
சிட்ரஸ் பழங்களுடன் பால்
சிட்ரஸ் வகை பழங்களை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது தவறு, பால் குடித்த பிறகும் அல்லது பால் குடிப்பதற்கு முன்பாகவும் குறிப்பு பழங்கள் அல்லது குறிப்பான சுவை கொண்ட பொருட்களை உண்ணக் கூடாது. அவ்வாறு செய்தால் தோல் பிரச்சினைகள் ஏற்படும்.அதன்படி இவற்றை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதோடு, உடலில் உள்ள நச்சுத்தன்மையும் அதிகரிக்கும். இதனால், வாந்தி, பேதி பிரச்னையும் ஏற்படும். எனவே தனித்தனியாக சாப்பிடவும்.
முள்ளங்கி மற்றும் பால்
முள்ளங்கி சாப்பிடுவதால் எந்த வித தீமையும் பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தில் பால் குடித்து சிறிது நேரத்தில் முள்ளங்கி சாப்பிட கூடாது என்று உள்ளது. முள்ளங்கி சாப்பிடுவதால் எந்த வித தீமையும் பக்க விளைவும் ஏற்படாது. ஆனால் பால் குடிப்பதற்கு முன் அல்லது பின் இந்த முள்ளங்கியை சாப்பிட்டால் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஆயுர்வேதத்தில் பால் குடித்து சிறிது நேரத்தில் முள்ளங்கி சாப்பிட கூடாது என்று உள்ளது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Grey Hair: நரை முடியை கருமையாக்கும் காபி; பயன்படுத்தும் முறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR