18-வது கார்கில் விஜய் திவஸ்: டிவிட்டடில் பலர் அஞ்சலி

Last Updated : Jul 26, 2017, 11:11 AM IST
18-வது கார்கில் விஜய் திவஸ்: டிவிட்டடில் பலர் அஞ்சலி title=

கார்கில் போரில் இந்திய படைகள் வெற்றி பெற்ற தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 

1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது.

இந்தியாவில் அப்போது பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான, பாஜக ஆட்சி நடந்தது. அந்த ஆண்டு மே முதல் ஜூலை வரை கார்கில் மீட்பு போர் நடந்தது.

இந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் பலர் தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர்.

மிக உயரமான மலைத்தொடரில் மிகுந்த சவால்களை எதிர்கொண்ட இப்போரில், 527 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட, 4,௦௦௦ பேர் கொல்லப்பட்டனர்.

கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் உயிர் தியாகத்தை நினைவு கூறும்வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 27-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

விஜய் திவஸ் என அழைக்கப்படும் இந்நாளில் காஷ்மீரின் டிராஸ் பகுதியில் உள்ள ராணுவ முகாம்களில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. 

இன்று கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பலர் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

 

 

 

 

Trending News