Parliament Winter Session News: நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு 269 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர் மற்றும் எதிராக 198 எம்.பி.க்கள் என ஒட்டுமொத்தமாக 467 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர். திமுக உட்பட இந்தியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது இந்த மசோதா அதிகாரப்பூர்வமாக நாடாளுமன்ற கூட்டுக்குழுவினுடைய விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது அரசியலமைப்புக்கு எதிரானது, கூட்டாட்சி முறைக்கு எதிரானது மற்றும் மக்களின் விருப்பத்திற்கு எதிரானது என்று நாங்கள் நினைக்கிறோம். இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் தற்போது அதை ஜேபிசிக்கு அனுப்பியுள்ளனர் என திமுக சார்பில் கூறப்பட்டு உள்ளது.
காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன, இது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதல் என்றும், நாட்டை 'சர்வாதிகாரத்தை' நோக்கி அழைத்துச் செல்லும் நடவடிக்கை என்றும் குற்றம் சாட்டின. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான உத்தேச மசோதா மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கப் போவதில்லை என்றும், ஆனால் இந்த மசோதா முற்றிலும் அரசியல் சாசனத்துக்கு உட்பட்டது என்றும் சட்ட அமைச்சர் மேக்வால் விளக்கம் அளித்துள்ளார்.
மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவாக 269 வாக்குகளும், எதிராக 198 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்குப் பிறகு, குரல் வாக்கெடுப்பு மூலம் சபையின் ஒப்புதலுக்குப் பிறகு மேக்வால் 'யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2024' ஐ அறிமுகப்படுத்தினார். இரண்டு மசோதாக்களையும் அறிமுகப்படுத்திய பிறகு, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, சபை நடவடிக்கைகளை பிற்பகல் 3 மணி வரை ஒத்திவைத்தார்.
மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?
மேலும் படிக்க - ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா... சாதகங்களும் பாதகங்களும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ