அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு பற்றி துப்புகொடுத்தால் ₹ 50 லட்சம் பரிசு....

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிற்கு உட்பட்ட ராஜஸ்சான்ஸி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் நேற்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிரன்கரி பவன் என்பது அக்கிராமத்தில் உள்ள மத போதனை, பிரார்த்தனை மண்டபம் ஆகும்.

Last Updated : Nov 19, 2018, 12:46 PM IST
அமிர்தசரஸ் குண்டுவெடிப்பு பற்றி துப்புகொடுத்தால் ₹ 50 லட்சம் பரிசு.... title=

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டதிற்கு உட்பட்ட ராஜஸ்சான்ஸி கிராமத்தில் உள்ள நிரன்கரி பவனில் நேற்று ஏற்பட்ட குண்டுவெடிப்பு விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். நிரன்கரி பவன் என்பது அக்கிராமத்தில் உள்ள மத போதனை, பிரார்த்தனை மண்டபம் ஆகும்.

அங்கு 2-லிருந்து 3 மோட்டார் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் குண்டெறிந்து சென்றதாகவும், முகத்தினை அவர்கள் துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண இயலவில்லை எனவும் சம்பவத்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருந்தனர். 

நில்லையில், அமிர்தசரஸ் குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் பற்றித் துப்புக் கொடுப்போருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் எனப் பஞ்சாப் முதலமைச்சர் மரீந்தர் சிங் அறிவித்துள்ளார். இது குறித்து பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமிர்தசரஸ் தாக்குதலில் தொடர்புடையவர்கள் பற்றி தகவல் தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். போலீஸ் உதவி எண்ணான 181-ல் தொடர்பு கொண்டு தகவல் தரலாம். தகவல் தருபவர்கள் குறித்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும்" என குறிப்பிட்டுள்ளார். 

இந்த தாக்குதல் தீவிரவாதிகளின் செயல் எனப் பஞ்சாப் காவல்துறைத் தலைமை இயக்குநர் சுரேஷ் அரோரா தெரிவித்தார். குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தைத் தேசியப் புலனாய்வு முகமையினர் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். 

Trending News