நவம்பரில் CBSE 10, 12 ஆம் வகுப்பு 2022 பொதுத்தேர்வுகள் : விரைவில் வெளிவரும் அட்டவணை

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கல்வி ஆண்டை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ள CBSE, நடப்பு கல்வியாண்டில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கான சிறப்பு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 20, 2021, 10:54 AM IST
  • CBSE அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும்.
  • கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, கல்வி ஆண்டை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ளது CBSE.
  • 2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் CBSE சில மாற்றங்களையும் செய்துள்ளது.
நவம்பரில் CBSE 10, 12 ஆம் வகுப்பு 2022 பொதுத்தேர்வுகள் : விரைவில் வெளிவரும் அட்டவணை title=

CBSE Board Exam 2022: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொதுத் தேர்வுக்கான அட்டவணையை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், மாணவர்கள் பொதுத் தேர்வுகளுக்கான தங்களது அட்டவணையை cbse.gov.in. என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கோவிட்-19 (COVID-19) தொற்றுநோய் காரணமாக, கல்வி ஆண்டை இரண்டு பிரிவுகளாக பிரித்துள்ள CBSE, நடப்பு கல்வியாண்டில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகளுக்கான சிறப்பு மதிப்பீட்டுத் திட்டத்தை அறிவித்தது.

2021-22 கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் CBSE சில மாற்றங்களையும் செய்துள்ளது. "2021-22 கல்வியாண்டுக்கான பாடத்திட்டம் இரண்டு அமர்வுகளில் பிரிக்கப்படும். பாடங்களின் தொடர்பு மற்றும் அவற்றின் தலைப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, வல்லுநர்களின் கண்காணிப்பில் ஒரு முறையான அணுகுமுறைப் பின்பற்றப்படும்” என்று சிபிஎஸ்இ இயக்குனர் ஜோசப் இம்மானுவேலின் அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒவ்வொரு அமர்வின் முடிவிலும், பிரிக்கப்பட்ட பாட திட்டத்தின் அடிப்படையில், CBSE தேர்வுகளை நடத்தும். ஒவ்வொரு கல்வி ஆண்டின் இறுதியிலும், CBSE நடத்தும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடப்பதன் சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தவே இந்த செயல்முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.” என மேலும் கூறப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் முதல் அமர்வுக்கான தேர்வுகள் (term 1 exams) நடைபெறும். 2022 ஆம் ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இரண்டாம் அமர்வுக்கான தேர்வுகள் (term 2 exams) நடத்தப்படும். முதல் அமர்வு தேர்வுகளில், MCQ அடிப்படையிலான அப்ஜெக்டிவ் வகை கேள்விகள் கேட்கப்படும். டர்ம் 2 தேர்வுகள் விரிவான, அதாவது, சப்ஜெக்டிவ் வகையில் இருக்கும்.

ALSO READ: தற்கொலை தீர்வல்ல -வீடியோ மூலம் நடிகர் சூர்யா உருக்கம்

மதிப்பெண்கள் நியாயமான முறையில் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக, வழிகாட்டுதல்கள் மற்றும் மதிப்பெண் கொள்கையின் (Marks System) படி உள் மதிப்பீடு, பிராக்டிகல் தேர்வுகள், பிராஜெக்டுகள் ஆகியவை நேர்த்தியான முறையில் மதிப்பீடு செய்யப்படும் என்றும் CBSE கூறியுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் ஊடகங்களிடம் பேசுகையில், டர்ம் 2 தேர்வுகளின் போது ஏதாவது இடையூறு ஏற்பட்டால், டர்ம் 1 தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் (weightage) வழங்கப்படும் என்று தெளிவாகக் கூறினார்.

டர்ம் 2 தேர்வுகளுக்குப் பிறகு, CBSE முடிவுகளை வெளியிடும். எனினும், டர்ம் 1 தேர்வுகளுக்கான தனி மதிப்பெண் சான்றிதழையும் மாணவர்கள் பெறுவார்கள் என்று CBSE கூறியுள்ளது.

ALSO READ: NEET:மருத்துவ படிப்பை தவறவிட்டேன்; ஆனால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கிறது - மேஜர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News