சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக-வுக்கு எப்பொழுதும் ஆசிர்வாதம் உண்டு: பிரதமர் மோடி

சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று amமாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்திற்கு சென்றைடந்தார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 12, 2018, 02:09 PM IST
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக-வுக்கு எப்பொழுதும் ஆசிர்வாதம் உண்டு: பிரதமர் மோடி title=

சத்தீஸ்கர் மாநிலம் உள்பட, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல், இம்மாதத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அந்தவகையில் 90 சட்மன்ற தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று  வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பஸ்தார், பிஜப்பூர், தண்டேலாடா உள்பட நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் தேர்தல் நடப்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 தொகுதிகளுக்கு காலை 7 முதல் 3 மணி வரையும், எட்டு தொகுதிகளுக்கு காலை 8 மணி முதல் 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மீதமுள்ள 72 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனுவு கடந்த நவம்பர் 5 ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 1,101 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

வரும் நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தல் 19 மாவட்டங்களில் உள்ள 72 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும்.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று(திங்கள்கிழமை) சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்திற்கு சென்றடைந்தார். அங்கு தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிலாஸ்பூரில் உள்ள அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றினார். 

பிரதமர் மோடி கூறியதாவது:- 

சத்தீஸ்கர் மாநில மக்கள் பாஜக-வுக்கு மீண்டும் மீண்டும் ஆசீர்வாதம் கொடுத்து ஆட்சியில் பங்குபெற வைத்தார்கள். அதற்கு தான் தலை வணங்குகிறேன். சத்தீஸ்கர் மாநில தொண்டர்கள் ஒருபோதும் ஆர்வமற்றவர்களாக இல்லை. இங்கே உள்ள தொண்டர்களிடம் உற்சாகம் ஒருபோதும் குறைந்ததே இல்லை. துப்பாக்கியை காட்டுவோருக்கு இவர்கள் ஜனநாயகத்தை பதிலாக காண்பிப்பார்கள் எனக் கூறினார்.

பிலாஸ்பூர் காங்கிரஸ் தலைவர்களை தாக்கி பேசிய பிரதமர் மோடி, எதிரிகளின் அரசியல் ஒரே குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது. அவர்களால் வளர்ச்சி இல்லை. எதிரிகள் (காங்கிரஸ்) வாக்குறுதிகளை மட்டும் அளிப்பார்கள். ஆனால் அதை செயல்படத்த மாட்டார்கள். ஆனால் பாஜக கடந்த 4 ஆண்டுகளில், சத்தீஸ்கர் மாநில மக்களுக்காக எத்தனை வீடுகளை கட்டி கொடுத்ததோ, அத்தனை வீடுகள் கட்டிக் கொடுக்க காங்கிரஸ் ஆட்சிக்கு 30 ஆண்டுகள் ஆகும் என காங்கிரஸ் கட்சியை தாக்கி பேசினார்.

 

சத்தீஸ்கர் மாநிலம் காங்கிரஸின் கையில் இருந்திருந்தால், இன்னமும் பின்தங்கிய மாநிலங்களின் ஒன்றாகவே இருந்திருக்கும். மேலும் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைத் தாக்கிய பேசிய மோடி, "அம்மா-மகன் இருவரும் பணமோசடி வழக்கில் ஜாமீனில் வெளியே வந்து வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்கள். ஜாமீனில் இருக்கும் இவர்கள் மற்றவர்களுக்கு நேர்மையை பற்றி விளக்கம் அளிக்கிறார்கள் என கூறினார்.

Trending News