நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் எல்லையையொட்டியுள்ள சில பகுதிகளை அந்த நாடு சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த பகுதிகளை புவியியல் வரை படத்தில் சீனாவுடன் சேர்த்து குறிப்பிடுவது, எல்லை நெடுகிலும் புதிய சாலைகள், ரெயில் பாதைகள் அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.
இந்தியாவின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், தலைவர்களுடனான பேச்சுவார்த்தை காரணமாகவும் சீனா தனது வாலாட்டத்தை சமீபகாலமாக நிறுத்திக் வைத்து இருந்தது.
இந்த நிலையில் அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா மீண்டும் ஊடுருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 9-நம் தேதி சீன படை வீரர்கள் நூற்றுக்கணக்கில் அருணாச்சலப் பிரதேசத்தின் ஊடுருவலில் ஈடுபட்டனர். மொத்தம் 250 வீரர்கள் வரை ஊடுருவலில் ஈடுபட்டனர். 3 மணி நேரம் வரை அவர்கள் இந்தியப் பகுதியில் தங்கி இருந்தனர். அதன் பிறகு திரும்பிச் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக இந்தியா தனது எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் தலைநகர் பெய்ஜிங்கில் சீன ராணுவ தலைமையகத்திடம் முறைப்படி எதிர்ப்பு தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளது.