சர்வதேச காற்றாடித் திருவிழா:குஜராத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

Last Updated : Jan 8, 2020, 09:32 AM IST
சர்வதேச காற்றாடித் திருவிழா:குஜராத் முதலமைச்சர் தொடங்கி வைத்தார் title=

குஜராத் மாநிலம் அகமதாபாதில் சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கியது. சபர்மதி ஆற்றங்கரையில் நடைபெறும் இந்த விழாவை முதல் அமைச்சர் விஜய் ரூபானி தொடங்கி வைத்தார்.

குஜராத் மாநிலத்தில் ஆண்டுதோறும் காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் இருந்து பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இத்திருவிழாவில் பங்கேற்று உள்ளனர். 

 

 

இது போன்ற திருவிழாவின் மூலம் காற்றாடி தொழிலில் பணியாற்றும் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெறுவார்கள். பல விதமான பட்டங்கள் இந்த திருவிழாவில் பறக்க விடப்பட்டுள்ளன. இதை ஏராளமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். இதில் உள்ளூர் மக்களுடன் 40 நாடுகளில் இருந்து திரண்டுள்ள ஏராளமான வெளிநாட்டவர்களும் உற்சாகத்துடன் காற்றாடிகளை பறக்க விட்டனர். பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்பட்ட காற்றாடிகள் வானில் வட்டமிட்டன. 

 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News