ஜம்மு காஷ்மீர்: CRPF முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!!

ஜம்மு காஷ்மீர் சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

Last Updated : Oct 16, 2018, 08:24 AM IST
ஜம்மு காஷ்மீர்: CRPF முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்!! title=

ஜம்மு காஷ்மீர் சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் காயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வமா மாவட்டத்தின் ககபுரா பகுதியில் சிஆர்பிஎப் முகாம் உள்ளது. இந்த முகாம் மீது நேற்று இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த தாக்குதலில், இரண்டு வீரர்கள் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாயின.

இதையொட்டி, பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, கடந்த வாரம் புல்வமாவில் உள்ள மற்றொரு சிஆர்பிஎப் முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் ஒரு வீரர் காயம் அடைந்தார். 

Trending News