மும்பை: பலத்த மழை காரணமாக மும்பையில் பேரழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. ரயில் பாதையிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
செம்பூரில் நிலச்சரிவு காரணமாக 17 பேர் கொல்லப்பட்டனர்
மும்பையில் கனமழை காரணமாக 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, குடிசைகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளன. மும்பையின் செம்பூர் நிலச்சரிவின் பாரத் நகர் பகுதியில் நிலச்சரிவு காரணமாக சேரிகளில் பெரிய சுவர் இடிந்து விழுந்துள்ளது. பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும். தீயணைப்பு படையினர், 13 பேர்களை மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை இன்னும் அங்கு நடந்து கொண்டிருக்கிறது.
செம்பூரில், தேசிய பேரிடர் நடவடிக்கை படையின் (NDRF) குழு பாரத் நகர் பகுதிக்கு சென்று, அங்கு குடிசைகள் இடிபாடுகளில் இருந்து, மக்களை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஏடுபட்டு வருகிறது.
மும்பையில் கடந்த ஜூன் 9-ந் தேதி மழைக்காலம் தொடங்கியது. இதில் பருவ மழை தொடங்கிய முதல் நாளே பலத்த மழையால் மும்பை நகரமே வெள்ளக்காடானது. அதன்பிறகு சில நாட்களுக்கு மழை நீடித்தது.
#UPDATE | Five bodies have been recovered and 5-6 more people are feared trapped in the debris of the building that collapsed in Mumbai's Vikhroli, says Prashant Kadam, DCP (Zone 7) pic.twitter.com/RoXopyL1WR
— ANI (@ANI) July 18, 2021
மும்பைக்கு ஒரு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்ததுடன், அடுத்த 24 மணிநேரங்களுக்கு நகரத்தில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை கூறியுள்ளது.
ALSO READ | Alcatraz Prison: உலகின் பயங்கரமான, மர்மமான சிறைச்சாலை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR